Friday, September 05, 2014

இன்றைய சந்தை அடிப்படை (SEP 05)


இந்திய நேரப்படி இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாகும் அந்நியச் செலாவணிக் கையிருப்புத் தகவல் மற்றும் வங்கிக் கடன் வளர்ச்சி இந்திய ரூபாயையும் சந்தையையும் வரும் திங்கள் அன்று பாதிக்கவல்லவையாக எதிர்ப்பார்க்கப்படுகிறது!
சென்ற முறை வங்கிக் கடன் வளர்ச்சியானது 11.6% ஆக இருந்ததும், அந்நியக் செலாவணி கையிருப்பாக 318.58 பில்லியன் டாலர்கள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது!



மாலை ஆறு மணிக்கு வெளியாகும் NON FARM PAYROLLS மற்றும் UNEMPLOYMENT RATE தகவல்கள் டாலர் சந்தையை சற்றே அசைத்துப் பார்க்கவல்லதாகும்!

அதைத் தொடர்ந்து மாலை 7:30க்கு வெளியாகும் IVEY PMI கனடிய டாலரை நேரடியாகவும் அதற்கெதிரான அமெரிக்க டாலரை மறைமுகமாகவும் பாதிக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது!

இன்று வர்த்தகர்கள் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர், நிக்கல் கமாடிட்டிகளில் கவனமாக இருக்க வேண்டிய நேரம்!

5:00 - 6:30 PM; 7:30 - 8:00 PM 

கவனத்துடன் வர்த்தகம் புரிக! வெல்க!




No comments: