Monday, September 01, 2014

இன்றைய சந்தை அடிப்படை (SEP 01)


இந்திய நேரப்படி இன்று முற்பகல் 11:30 க்கு Statistisches Bundesamt Deutschland வெளியிடும் வருடாந்திர மற்றும் காலாண்டு அறிவிப்பான ஜெர்மனியின் GDP தகவல் யூரோவை நேரடியாகவும் அதற்கெதிரான அமெரிக்க டாலரை மறைமுகமாகவும் பாதிக்கவல்லது!

இதற்கு முன்னர் காலை 10:30க்கு MARKITஇன் வெளியீடான 'HSBC Markit Manufacturing PMI' இந்திய ரூபாயில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது!

சென்ற முறை 53 ஆக இருந்த இவ்விவரம் இம்முறை 0.10 குறைத்து 52.90 ஆகவே அனுமானிக்கப்பட்டுள்ளது!

எதிர்ப்பார்ப்பிற்கு மேல் தகவற்புள்ளிகள் வெளியானால், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வலுப்பெற்று டாலர் சரிய ஏதுவாகும்!

இன்று பிற்பகல் 1:25 க்கு வெளியாகும் GERMAN MANUFACTURING PMI மற்றும் பிற்பகல் 2 மணிக்கு GBP நாணயத்தை பாதிக்கக் கூடிய MANUFACTURING PMI செய்திகளும் இன்று சந்தையில் டாலர், கச்சா எண்ணெய், காப்பர் விலை நகர்வுகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பைக் கொண்டு வரும்!

இன்று வர்த்தக நண்பர்கள் கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி, காப்பர், நிக்கல் போன்ற கமாடிட்டிகளில் கவனத்துடன் வர்த்தகம் புரிய வேண்டிய நேரம் 

10:30 - 11:05 AM; 11:30 - 12:05 PM; 1:20 - 1:55 PM 

வெல்க!







No comments: