Wednesday, September 03, 2014

இன்றைய சந்தை அடிப்படை (SEP 03)

இந்திய நேரப்படி இன்று காலை 10:30 க்கு வெளியாகவிருக்கும்
HSBC SERVICES PMI தகவல் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வருமென்று என்ற
எதிர்ப்பார்ப்பு உள்ளது!

அதாவது சென்ற முறை 52.2 ஆக இருந்த இக்குறியீடு இம்முறை அதிகமானால் ரூபாய் வலுவடைந்து இந்திய சந்தைக் குறியீடுகள்
தொடர்ந்து மேலேறும் வாய்ப்பைப் பெரும்!
அப்படி அல்லாது குறைந்து வெளியானால் டாலர் வலுப்பெற்று தினவர்த்தகத்தினிடையே  இந்திய சந்தை (நிஃப்டி/சென்செக்ஸ்)
செங்குத்தாக சரிய காரணமாக அமையும்!

இதைத்தொடர்ந்து மதியம் இரண்டு மணிக்கு வெளியாகும் SERVICES PMI தகவல் GBP நாணயத்தை நேரடியாகவும், அதற்கெதிரான டாலரை மறைமுகமாகவும் பாதிக்கவல்லதாகும்!

சென்ற முறை 59.1ஆக இருந்த இக்குறியீடு இம்முறை  58.5 ஆக சந்தையால் எதிர்ப்பார்க்கப்படுகிறது!
எதிர்ப்பார்பிற்கு மேல் வெளியாகும் பட்சத்தில் பவுண்ட் மற்றும் தங்கம் உயர்ந்து டாலர் மற்றும் கச்சா எண்ணெய் சரியாய் ஏதுவாக அமையும்!
BoC GOVERNOR Mr.POLOZ
தொடர்ந்து மாலை ஏழரை மணிக்கு வெளியாக இருக்கும் கனடாவின் வட்டி விகித முடிவுகள் மற்றும் கனடிய வாங்கி ஆளுநர் திரு.போலோஸ் அவர்களின் உரை, இன்று கனடிய டாலருக்கும் அதற்கெதிரான அமெரிக்க டாலருக்கும் வெகு முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளாகப் பார்க்கப்படுகின்றன!

இதன் வட்டி விகித முடிவுகளைப்  பொருத்தமட்டும் சென்ற முறை 1.0% ஆக இருந்தது இம்முறையும் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே 1.0% ஆகவாகவே  வெளிவருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது!

மீறி (அதிகமாக) வெளிவரும் பட்சத்தில் டாலருக்கு எதிரான CAD உயர்ந்து டாலர் சரிய காரணமாகும்

மேற்கூறியவை  மட்டுமல்லாமல் சந்தை திறப்பிற்கு முன் காலை 7:00 மணிக்கு வெளியாகும் ஆஸ்திரேலிய வருடாந்திர மற்றும் காலாண்டு GDP தகவல் சந்தையின் திறப்பில் குறிப்பிடதக்க மாற்றத்தை கொண்டுவருமெனத் தெரிகிறது!

வர்த்தகர்கள் இன்று கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி, காப்பர் மற்றும் நிக்கலில் கவனமாக இருக்க வேண்டிய நேரம்

10:25 - 11:00 AM; 2:00 - 2:30 PM; 7:25 - 8:15 PM




No comments: