Friday, June 13, 2014

RUSH FOR YOUR SEATS WITHIN THIS WEEK

HERE WE GOOOOO GUYS....!!
OUR TRADING TRAINING CLASSES ON JUNE 22 2014 (SUNDAY)
TIME: 10 AM - 4 PM
(LUNCH BREAK: 1 -2 PM)
PLEASE MAKE A NOTE OF THE PLACE FRIENDS ...


ADDRESS:
No.11/2 HABIBULLAH ROAD
T. NAGAR
CHENNAI - 17 (Opp to VRR Scan Center)
CHAIRS WAITING FOR U GUYS!
FOR DETAILS CONTACT ME 9788563656















DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.

Thursday, June 12, 2014

PAY SEMINAR AHEAD - RUSH TO BOOK YOUR SEATS

வர்த்தக நண்பர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் எங்கள் வகுப்புகள் இம்மாதம் ஜுன் 22-ஆம் தேதி சென்னையில் முடிவாகியுள்ளது!

ஆர்வலர்கள் தங்கள் மொபைல் எண் பெயர் மற்றும் இடம் இதை தெரிவித்து 9788563656 என்ற எண்ணுக்கு SMS செய்யலாம்!

இது விளையாட்டு வியாபாரமல்ல நண்பர்களே! சந்தையில் தீவிரமான தொழில் முனைவோரும், கட்டாயம் வகுப்பில் கலந்து கொள்ள இருப்போர் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்!

உங்கள் வியாபார வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் கிடைத்தற்கரிய திருப்புமுனைக்கு நாங்கள் உத்தரவாதம்!

கமாடிட்டி மற்றும் ஈவிட்டி இரண்டிற்கும் சேர்த்து 5000 ரூ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது!

இரண்டொரு நாட்களில் இக்கட்டணத்தை சந்தையிலிருந்து எடுப்பது எப்படி என்பதும் கற்றுத் தரப்படும்!

எனவே இக்கட்டண வகுப்பில் தைரியமாக எவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்!


# ஏன் எங்கள் கட்டணம் உயர்ந்தது..??

"அது டெக்னிக்கின் தரத்தைப் பொறுத்தது! "
நண்பர்களே......விலைமதிக்க முடியாதவைகளை ஏதேனுமோர் விலைக்குள் அடைத்தால் அது சற்று உயர்ந்தது மாதிரியே புலப்படும்!
வகுப்பின் முடிவில் நீங்கள் பெற்றுச்செல்வது கட்டணத்திற்கு அதிகமாக இருப்பதைக் கட்டாயம் உணர்வீர்கள்! "
நாங்க ரெடி நீங்க ரெடியா?
---------------------------------------
பங்கு மற்றும் பொருள்சந்தை சார்ந்த வகுப்புகள் உள்ளூரில் அவ்வப்போது எடுத்துக் கொண்டிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாலும் ஏகோபித்த முகநூல் வாசகர்கள், வர்த்தக நண்பர்கள் வேண்டுகோளுக்கிணங்க இன்னும் சிறிது நாட்களில்
தமிழ்நாட்டின் பற்பல மாவட்டங்களிலும் எங்கள் வகுப்புகளை விரிவுபடுத்த உள்ளோம்!

முகநூல் வாசகர்கள் மட்டுமல்லாது சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அவரவர் நட்புகளையும் அனைத்து பகுதிகளில் இருந்தும் அன்போடு வரவேற்கிறோம்!

"இதுவரை நிறைய வகுப்பை பார்த்துட்டோம் ஸார்! எதையுமே ஒழுங்கா பின்தொடர முடியல! எதிலும் லாபம் வர மாட்டேங்குது!"

"எந்த நேரம் என்ன ஆகும் சந்தையில என்று யாரும் சரியா சொல்றதும் இல்ல!"

"அக்கவுன்ட் ஆரம்பிச்சு கொஞ்ச நாள்'ல சரியான 'ஃபாலோ அப்' எங்களாலேயும் வெச்சுக்க முடியல... அவங்களும் வெச்சுக்க மாட்டேங்குறாங்க.. அப்புறம் 'பழைய குருடி கதவை திறடி' கதையா மறுபடியும் எல்லாம் நட்டத்துல தான் முடியுது!

என்று விதவிதமாக வகுப்புகள் போய் வந்து சலிப்படைந்து மிகுதியாக அலுப்படைந்தவரா நீங்கள்..?
உங்களுக்கான இறுதி வகுப்பைத் தான் நாங்கள் எடுத்துக் கொண்டிருகிறோம்!

இது போன்று முற்றிலும் நம்பிக்கை இழந்து வெறும் கேள்விகளோடு இருக்கும் உங்களின் அனைத்து கேள்விகளையும் நானே இங்கு பதிவிட்டு அதற்கு பதிலும் கூற விழைந்துள்ளேன்!

இதன் மூலம் உங்கள் பெரும்பான்மையான சந்தேகங்கள் தீர்ந்து போகும் என்றும் நம்புகிறேன்!

1) சந்தையில் நீங்கள் எத்தனை வருடமாக இருக்கின்றீர்கள் ?

பதில்: எட்டு வருடங்கள்

2) இதில் லாபம் சம்பாதிக்கின்றீர்களா..?

பதில்: கட்டாயமாக.. லாபம் சம்பதிப்பதோடு மட்டுமல்லாமல் சம்பாதிக்கவும் கற்றுத் தருகிறோம்!

3) ஆரம்பித்தில் இருந்தே லாபத்தில் தான் இருக்கின்றீர்களா..? நட்டமே வந்தது கிடையாதா..? உங்களிடம் சான்று இருக்கிறதா?

பதில்: கண்டிப்பாக ஆரம்பித்தில் நாங்களும் நிறைய இழந்தவர்கள் தான்; இங்கு இழக்காமல் யாரும் கற்றுக் கொண்டுவிட முடியாது; எங்களுக்கு அன்று இல்லாத ஒரே வாய்ப்பு பொறுமையாக இதைக் கற்றுத் தர ஆளில்லாதது தான் - இப்போது வரும் புதிய வர்த்தகர்களுக்கு அப்படி இல்லை!
ஆர்வமும் முயற்சியும் பயிற்சியும் இருந்தால் போதும் - எந்த சந்தையிலும் வென்று வாகை சூடலாம்! உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்!

இரண்டாவதாக இதில் சான்றுகள் கேட்டீர்கள்.. கட்டாயம் காண்பிக்க முடியும்! ஆனால் இந்த வணிகத்தை பொறுத்த மட்டும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள்!
எப்போதும் இதில் நீங்கள் வரலாறை நம்புவதை விட அன்றன்று இவர்கள் எப்படி perform செய்கிறார்கள் வருங்காலத்தில் எப்படி செயல்படுவார்கள் என்ற தொடர் கண்காணிப்பும் கணிப்புமே மிக அவசியம்!

சென்ற இரண்டு வருடங்களாக நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல தரகு நிறுவனங்கள், உபதரகர்கள் analyst'கள் இன்று காணாமல் போயிருக்கலாம்! ஆக இதில் இறந்த காலத்தை விடவும் நிகழ்காலம், எதிர்காலம் பற்றிய ஆய்வுகளே முக்கியம்!
அது நாங்கள் என்றில்லை - யாரிடம் நீங்கள் சென்றாலும் ஆராய வேண்டியது இதைத்தான்!

4) சந்தையில் லாபத்தில் இருக்கும் நீங்கள் எதற்கு வகுப்புகள் எடுத்து சம்பாதிக்க வேண்டும்..? பேசாமல் சந்தையிலேயே சம்பாதித்து விட்டு போக வேண்டியது தானே..? அப்படி மக்கள் மேல் அக்கறை இருந்தால் அனைத்தையும் இலவசமாக கொடுக்க வேண்டியது தானே..?

பதில்: நண்பர்களே..! இந்த முக்கியமான கேள்விக்கு தெளிவான பதிலைக் கூற கடமைப்பட்டிருக்கிறேன்! நன்கு கவனியுங்கள்!

" ஒரு மருத்துவரோ வக்கீலோ தனக்கென்று ஒரு பிரச்சனை வரும் போது மட்டும் தான் கற்றதை பயன்படுத்தி (தனக்கு மட்டும் அதைத்) தீர்த்துக் கொள்ளலாம் என்று இருப்பதில்லை - அப்படி ஒருவர் இருந்தால் நீங்களே அவரை என்னவென்று அழைப்பீர்கள்?
அது மாதிரி தான் இத்தொழிலும்! நாங்கள் கற்றவற்றை, கண்டு பிடித்தவற்றை பிறருக்கு தருவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறோம்!
இலவசமாக ஏன் தருவதில்லை என்றால் இலவசமாக வரும் எந்த விஷயத்தையும் யாரும் மருந்துக்குக் கூட மதிப்பதில்லை - உங்கள் வீட்டில் நீங்கள் காசு போட்டு வாங்கிய டி.வி எங்கு இருக்கிறது..? கலைஞர் டி.வி. எங்கு இருக்கிறது (அல்லது) எப்படி இருக்கிறது..?
மக்களை முடமாக்குவதும், கண்ணியமற்ற ஒருவித அலட்சியப்போக்கிற்கு தள்ளுவதும் இது மாதிரி அளவற்ற இலவசங்கள் தான்!

சரி இருந்தாலும் பரவாயில்லை.. நிறைய பேர் மிகுந்த வலியோடு அலைபேசி கேட்டுக் கொள்கிறார்களே என்பதற்காக (நான் அல்லும் பகலும் பாடுபட்டு கண்டறிந்த) சிலபல விலைமதிப்பற்ற தொழில்நுட்பங்களை இங்கு முகநூலில் எல்லோரும் கற்று பயனடையும் வண்ணம் இலவசமாகத் தான் பதிவு செய்து வந்தேன்!

என்ன ஆயிற்று..?

"இப்படித்தான் இவ்வளவு பெரிய விஷயத்தை தூக்கி கையில சும்மா கொடுப்பாங்களா..? உனக்கு கொஞ்சங்கூட அறிவில்லையா..? அது இல்லையா இது இல்லையா........" என்று என்பால் அக்கறை கொண்ட நெருங்கிய சில நண்பர்களின் வருத்தத்தை சம்பாதித்துக் கொண்டது தான் மிச்சம்!

ஒருவர் கூட "ஸார் இதைப் பயன்படுத்தி நான் இவ்வளவு சம்பாதிச்சேன்..ரொம்ப சந்தோஷம் ஸார்" என்று மருந்துக்கு கூட அழைத்து பின்னூட்டம் தரவில்லை இந்த நிமிடம் வரை!

ஏன்?

ஏனென்றால் அது இங்கு அனாமத்தாக வந்த அலட்சியம்!

மட்டுமல்லாமல் இதுவும் ஒரு தொழில் தான்! - இதில் வருமானம் வரும் எந்தக் கிளை வியாபாரத்தையும் ஒருவர் ஏன் புறக்கணிக்க வேண்டும் சொல்லுங்கள் ?

5) சந்தையில் வகுப்புகள் எடுக்கும் நீங்கள் பிறரிடம் இருந்து எப்படி வேறுபடுகின்றீர்கள் ?

நல்ல கேள்வி! இதைப் பற்றி விவரமாக ஒரு பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன்! அதை அப்படியே உங்கள் பார்வைக்குத் தருகிறேன் - அப்படித்தான் எங்கள் வகுப்புகள் மற்ற வகுப்புகளிடமிருந்து வித்தியாசப் படுகிறது எனலாம்!

//சந்தையில் எந்த பொருளை எந்த நேரத்தில் வாங்க வேண்டும் என்பதை சில சமயம் விலையும்,
எந்த பொருளை எந்த விலையில் வாங்க வேண்டும் என்பதை சில சமயம் நேரமும் தீர்மானிக்கும்!

சரியான விலையில் ஒரு பொருளை தப்பான நேரத்தில் வாங்குவதும்,
சரியான நேரத்தில் ஒரு பொருளை தப்பான விலையில் வாங்குவதும் பெரும்பாலும் நட்டத்தில் மட்டுமே முடியும்!

விலையைப் பற்றி கவலைப்படும் பல தொழில்நுட்ப ஆய்வாளர்களே கூட நேரத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை!

இதைக் கண்டறிய சற்றே சிக்கலான TIME THEORY கணிதங்கள் உண்டு!
ஆனால் வெகு நிச்சயமாக வர்த்தக நேரத்தில் அதைக் கணக்கிட்டு கொண்டிருந்தால் வர்த்தக வாய்ப்பே பறிபோகக் கூடிய ஒரு பயங்கரமான Drawback இதில் இருப்பதால் எங்கள் வரைபடத்தில் உள்ள ஒரு முக்கியமான கருவியைக் கொண்டே இதை எளிமையாகக் கண்டறியும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து வாடிக்கையாளர்களுக்கும் வகுப்பில் கலந்து கொள்வோருக்கும்
கற்றுக் கொடுக்கிறேன்! //

மட்டுமல்லாமல் எந்நேரம் வேண்டுமானாலும் எங்களைத் தொடர்பு கொண்டு எந்த சந்தேகமும் கேட்கலாம்!
'வகுப்பை எடுத்தார்கள் - காசை வாங்கினார்கள் - கல்லாவை கட்டினார்கள்' என்று உங்களைத் தூர விட்டுத் தொலைந்து போகாமல் வர்த்தக நேரத்தில் நீங்கள் டெக்னிக்குகள் பழகும் வரை உங்களோடு கூடவே ஆன்லைன் மூலம் தொடர்பில் இருந்தபடி எப்போதும் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு!

6) இவ்வளவு கூறும் உங்களுக்கு இப்போதெல்லாம் நஷ்டங்களே வருதில்லையா..?

பதில்: அப்படி யாரும் சொல்வதற்கில்லை! கட்டாயம் நட்டங்களும் வரத்தான் செய்யும் - எங்களுக்கும் நட்டங்கள் உண்டு - இங்கு 100% HOLY GRAIL என்று எந்தத் தொழில்நுட்பமும் இல்லை - அப்படி இருப்பதாக யாராவது சொன்னால் 100% அவர்கள் நம்பத்தகாத ஆசாமி தான்! அது பச்சைப் பொய்!

சந்தையில் அப்படி ஒரு தொழில்நுட்பம் இருந்தால் வேறு யாரும் எந்த வேலையும் செய்து கொண்டு இருக்கப்போவதில்லை' என்பதையும் யோசியுங்கள்!

எனவே நாம் கற்க வேண்டியதெல்லாம் சந்தையில் நட்டங்களை எப்படி நம் லாபங்களுக்குள் அடக்குவது என்பதைத் தான்!
அதையும் முறையாக கற்றுத் தேர்ச்சி பெறலாம்!

7) வகுப்பு எத்தனை மணி நேரம்...? ஒரு வகுப்பிற்கு தற்போது எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்?

பதில்: கமாடிட்டி ஈக்விட்டி இரண்டும் சேர்த்தே எடுப்பதால் வகுப்பு காலை 10 மணி முதல் மாலை 5 வரை இருக்கும்!
களைப்பு நீங்க நண்பர்களுக்கு இடைவேளையில் உணவு உபசரிப்பும் கட்டாயம் உண்டு!

வகுப்புகளுக்கான கட்டண நிர்ணயம் தற்சமயம் ஆலோசனையில் தான் உள்ளது - நிச்சயம் எவரும் பங்கு பெரும் வண்ணம் தான் இருக்கும் - விரைவில் இதே இடத்தில் கட்டணமும் அறிவிக்கப்படும்!

8) MONEY MANAGEMENT பற்றி சொல்லித்தருவீர்களா..?

பதில்: கட்டாயம் சொல்லித்தரப்படும் - அது இல்லாமல் எந்த தொழில்நுட்பமும் கை கொடுக்காது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்!

9) தொடர்ச்சியான FOLLOW UPக்கு வழி வகை உண்டா..?

பதில்: சமூக ஊடகங்கள், அலைபேசிகள், மற்றும் வீடியோ கான்ஃபரன்சிங் என்று அனைத்து தொழில்நுட்பமும் இன்று ஏகத்துக்கும் வளர்ந்து விட்டதால் இதற்கு எப்போதும் சாத்தியம் உண்டு!
தேவைப்படுவதெல்லாம் மற்றவருக்கான மனம் தான்! அது எங்களிடம் உள்ளது! நம்பிக்கையோடு வாருங்கள்! வெல்லலாம்!

மேலும் விபரங்களுக்கும் கணக்கு திறப்பிற்கும் அணுகவும்

Mahindeesh Sathish @ 9788563656

10) சந்தையில் நீடித்த வெற்றி சாத்தியமா..?

பதில்: கண்டிப்பாக இதில் தொடர் வெற்றி சாத்தியமே..! ஒரே நிபந்தனை - வகுப்பில் கற்றுக் கொள்வது தவிர உங்கள் விருப்பத்திற்கு நீங்கள் வர்த்தகம் செய்யவே கூடாது..!

# இதற்கு மேலும் உங்களிடம் கேள்விகள் இருந்தால் தயங்காமல் பதிவிடுங்கள் அன்பு நண்பர்களே! இப்போதைக்கு விடை பெறுகிறேன்!

நன்றி!

வருக! வெல்க!