GANN எனும் சகாப்தம்
பங்கு சந்தை வர்த்தகத்தில் சில கோட்பாடுகளை கடைப்பிடித்து வணிகம் செய்பவர்கள் என்றுமே வெற்றிக் கனிகளை அள்ளிக் குவிப்பது கண்கூடான விஷயம்.
அதில் மிகச் சிறந்த கோட்பாடாக அன்றும், இன்றும், என்றும் விளங்குவன மூன்று..
அவை
1) GANN SQUARE OF NINE THEORY
2) ELIOT WAVE THEORY
3) FIBONACCI RETRACEMENT THEORY
என் வரையில் இதில் மிகச் சிறந்த ஒன்றாக நான் என்றுமே பிறரிடம் சொல்வது
'GANN SQUARE OF NINE THEORY ' பற்றித் தான்
ஏன் எனில் இது நம் பிரபஞ்ச நியதியோடு ஒத்துப்போகும் கோட்பாடு..
அதன் காரணமாகவே இதன் நம்பகத்தன்மை என்பது நூறு சதவிகிதமாகிறது ...
எப்படி என்றால் இந்த பிரபஞ்சத்தில் இன்றும் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் அழியாமல் உள்ள அனைத்து சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களும் ஏதோ ஒரு கணித முறைப்படித்தான் ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளாமல்
சுற்றிக்கொண்டிருப்பதாக W.D. GANN என்ற அறிஞர் கண்டறிந்தார்.
ஏதோ ஒரு கணிதம் இந்த பிரபஞ்சத்திற்கே பொதுவாக இருக்கும் பட்சத்தில்,கண்டிப்பாக இந்த பிரபஞ்சத்தின் ஒரு துகளான பூமியையும் அக்கணிதம் பாதிக்கும் என்று நம்பினார்.
பல வருட ஆய்வுகளின் முடிவின் ஒரு பகுதியாகத்தான் அவர் பங்கு சந்தையிலும் அது எதிரொலிப்பதை வியக்கத்தக்க வகையில் வெளிக்கொணர்ந்தார்.
ஏதோ சொல்லி விட்டு போய விடவில்லை அவர்..
மாறாக பங்கு சந்தைக்கு ஏற்றவாறு அதை முறைப்படுத்தபட்ட கணிதமாக மாற்றி
15 வருடங்களுக்கு WALL STREET-ன் (அமெரிக்க பங்கு சந்தையின் இருப்பிடம்) முடி சூடா
மன்னராக திகழ்ந்தார்.
அறிஞர்களுடனான பல சந்திப்புகளின் போது தான் இந்த கணித முறையை பைபிளில் இருந்து கண்டு கொண்டதாகவும், 12 கோள்களும் தேவ குமாரனின் 12 கட்டளைகளை குறிக்கும் விதமாக அமைந்திருக்கும் ஒற்றுமையை சிலாகித்து கூறுவாராம்.
நம் இந்திய முறைப்படி ஜோதிடத்தில் கட்டங்களின் எண்ணிக்கையும் அதுவாக இருப்பது மற்றும் ஓர் ஆச்சரியம்.
1955 வரை வாழ்ந்த இந்த மாபெரும் அறிஞன் தான் கண்டறிந்த கணித முறையை பயன்படுத்தி தான் வாழும் காலத்திலேயே அடுத்தடுத்த அமெரிக்க ஜனாதிபதிகளையும் கணித்து கூறினார் என்றும் இவரை பற்றி செய்திகள் உண்டு.
இன்றும் இவர் பங்கு சந்தையில் மேற்கொண்ட ஆய்வுகள் பற்றி தமிழில் ஒரு புத்தகமும் இல்லை.
என்னால் இயன்ற சிறிய முதல் கல்லை எடுத்து வைப்பதில்
பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆம். என் அறிவிற்கு எட்டிய வரையில் சில அற்புதம் நிரம்பிய விஷயங்களையும்,
அனுபவங்களையும் சேர்த்து எளிய தமிழில் கூடுமானவரையிலும் ஆர்வத்தோடு படிப்பதற்கு ஏதுவாக மின் பதிப்புகளாக 'GANN எனும் சகாப்தம் '
என்ற தலைப்பில் இந்த தளத்திலேயே வெளியிட உள்ளேன்.
தனியொரு ஆளாய் இந்த ஆய்வையும், எழுத்து பணியையும் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், என்னுடைய நேரம், சக்தி இதை பொறுத்து இம்மின் பதிப்பு புத்தகத்தின் தொடர்ச்சி அமையும் என்பதை மிக்க தாழ்மையுடன் தெரிவித்துகொள்கிறேன்
உங்கள் மேலான ஆதரவையும்,விமரிசனங்களையும் எதிர் நோக்கி காத்திருக்கும்
உங்கள்
மஹிந்தீஷ்(எ)சதீஷ்
(பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட விரும்புவோரும், ஈடுபட்டுக்கொண்டிருப்போரும்,
ஆங்கிலத்தில் ஏற்கனவே பல சிறந்த ஆய்வாளர்களால் வெளி வந்துள்ள GANN ஆய்வுகள் பற்றின பதிப்புகளை வாங்கி படித்து பயனடையலாம்.)
GANN அவர்களே எழுதிய புத்தகங்களும் உண்டு ...
ஒரு சிபாரிசு குறிப்பு கீழே
Price: US$59/HK$460
(all inclusive)
Author: W.D. Gann
Date Published: 1949
Publisher: Lambert Publishing
Price: US$65/HK$507
(all inclusive)
Author: W.D. Gann
Date Published: 1942
Publisher: Lambert Publishing