Tuesday, September 02, 2014

இன்றைய சந்தை அடிப்படை (SEP 02)

முக்கியமாக இரு வேறு நாணயங்களை பாதிக்கக்கூடிய செய்திகள் இன்று முறையே காலையும் மாலையும் வரவிருக்கின்றன!

முதலாவதாக ஆஸ்திரேலிய டாலரை நேரடியாகவும் அதற்கெதிரான அமெரிக்க டாலரை மறைமுகமாகவும் பாதிக்கவல்ல செய்திகளான RBAவின் வட்டி விகித முடிவுகள் மற்றும் அதன் மதிப்பறிக்கை!
2.50% ஆக இருந்த வட்டி விகிதம் இம்முறையும் அதே நிலையில் மாறாமல் இருக்கும் என்று சந்தையால் எதிர்ப்பார்க்கப்படுகிறது!
மீறி உயர்த்தப்பட்டால் ஆஸ்திரேலிய டாலர் வலுப்பெற்று அதற்கு நிகரான அமெரிக்க டாலர் சற்றே சரிய ஏதுவாகும்!
குறைந்தால் AUD சரிந்து அமெரிக்க டாலர் (USD) வலுப்பெறும்!

இரண்டாவதாக இந்திய நேரப்படி இன்று மாலை ஏழரை மணிக்கு
வெளியாகும் அமெரிக்க டாலர் மற்றும் அதன் குறியீட்டை நேரடியாக பாதிப்புக்குள்ளாக்கும்  ISM MANUFACTURING PMI மற்றும் ISM MANUFACTURING EMPLOYMENT தகவல்கள்.

சென்ற முறை 57.1 ஆக இருந்த இக்குறியீடு இம்முறை குறைத்து 56.9 ஆக எதிர்ப்பார்க்கப்படுகிறது!

56.9 க்கு மேல்   ISM MANUFACTURING PMI  வெளியாகும் பட்சத்தில் டாலர் வலுப்பெற்று அதற்கு நிகரான உலக நாணயங்கள் (பிரதானமாக யூரோ) சரிய ஏதுவாகும்!

இன்று சந்தையில் தினவர்த்தகர்கள் கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி, நிக்கல் மற்றும் காபர் அதில் கவனமாக இருக்க வேண்டிய நேரம்...

10:00  - 10:30 AM & 7:30 - 8:00 PM

வெல்க!





No comments: