சந்தையில் தொழில் நுட்ப ஆய்வுகள் அறிந்தவரோ அல்லாதவரோ இருவருமே இந்த அனுபவத்தைப் பெற்றிருக்கக் கூடும்!
அதாவது ஒரு பொருளை அல்லது பங்கை வாங்கியவுடன் அது சரசரவென்று இறங்க ஆரம்பித்து விடும் அல்லது விற்றவுடன் முதல் வேலையாக விறுவிறுவென ஏற ஆரம்பித்து விடும்!
இன்றும் கூட சந்தைத் தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் ப்ரோக்கரேஜ் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு
"ஸார்... நான் வாங்கும் போது தான் சார் கரெக்டா இறங்க ஆரம்பிப்பான் - என்னமோ எனக்காகவே காத்திருந்து யாரோ எனக்கெதிரா சதி பண்றா மாதிரியே இருக்குது ஸார்...இது எப்படி சார்..? நானும் ஒரு தடவை இல்ல ரெண்டு தடவ இல்ல பல தடவ பார்த்துட்டேன்.. தோ இவர் வாங்கும் போது இறங்காது...அவர் வாங்கும் போது இறங்காது... ஆனா நான் வாங்க ஆரம்பிச்ச உடனே மளமளமள'ன்னு இறங்க ஆரம்பிச்சுடுவான் - எல்லாம் என் ராசி ஸார்" என்று தன்னைத் தானே ஒருவித தாழ்வு மனப்பான்மையுடன் நொந்து கொள்வதைக் காணலாம்!
இது ஏறக்குறை 95 சதவிகித வர்த்தக மக்களின் புலம்பலாக ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தரகு அலுவலகத்திலும் பதிவு செய்யப்படுகிறது!
ஆனால் சந்தையில் அப்படி கோடான கோடி தனிப்பட்ட வர்த்தகர்கள் செய்யும் ஒவ்வொரு வர்த்தகத்தையும் யாரும் கவனித்துக் கொண்டிருக்கவும் முடியாது! யாரும் யாருக்கெதிராகவும் சதி செய்தும் கொண்டிருக்கவும் முடியாது!
இதெல்லாம் தோல்வி முகத்தில் இருப்போரின் மனப்பிராந்தியே..!
(சந்தையில் FRAUD என்பது வேறு மாதிரி நடக்கும் - ஆனால் அவர்களும் நீடித்த காலம் அதைச் செய்து கொண்டிருக்க முடியாது! - ஒரு நாள் வசமாகச் சிக்கிக் கொள்வர் - பல நிறுவனங்களில் சிக்கிக் கொண்டும் இருக்கின்றனர் - செய்திகள் வந்த வண்ணம் தான் உள்ளன! - அது பற்றி விரிவாக பின்னர் தனி பதிவிடுகிறேன்!)
உண்மை என்னவென்றால் ஒரு பொருளோ பங்கோ அதனதன் நகர்வில் தத்தமது இயல்போடு ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் தான் இருக்கின்றன!
ஆனால் குறிப்பிட்ட பொருளை வாங்கிய பின் தான் நாம் அதை உன்னிப்பாக நொடிக்கு நொடி அமர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றோம்! அதனால் தான் அது அவ்வண்ணம் தோன்றுகிறது!
அது மட்டுமல்லாமல் மிகச் சரியாக தடுப்பு நிலைக்கு (RESISTANCE) அருகில் சென்று பலர் வாங்கி விடுவர்...விலை தடுக்கப்பட்டு மளமளவென்று சரியத் தொடங்கி விடும் - பல டெக்னிக்கல் அனலிஸ்ட்டுகளே செய்யும் குளறுபடி வர்த்தகம் இது - கேட்டால் ப்ரேக் அவுட் ஆனான் ஸார்.. அதான் வாங்குனேன்' என்பார்கள் - டெக்னிக்கலாக இதில் FALSE BREAK OUT என்ற விஷயம் உண்டு என்பதை அறியாமல் அப்படி செய்து விடுவதும் நடக்கும்! அல்லது சரியான விலையில் பிடித்திருப்பார்கள் - ஆனால் தவறான நேரத்தில் வாங்கியிருப்பார்கள்.. இப்படி இருந்தாலும் முதலில் இறங்கி வர்த்தகரை மிகவும் கலவரத்திற்குள்ளாக்கி அவர்களை நட்டத்தில் வெளிவரச் செய்து மீண்டும் மேலேறி சென்று அவர்கள் முன்னர் கணித்த இலக்கை மிகச் சரியாக சிறிது நேரம் கழித்து குறிப்பிட்ட பங்கோ பொருளோ அடையும்!
அப்போது அவர்கள் தங்கள் மேல் தாங்கள் கொள்ளும் கோபத்திற்கு அளவே இருக்காது.. உணர்ச்சி வேகத்தில் மறுபடியும் தலைகீழாக வர்த்தகம் புரிந்து இன்னும் பெரிதாக நட்டம் வர பக்கத்தில் உள்ள பொருளை தூக்கிப்போட்டு உடைப்பர் (அந்த நஷ்டம் தனி)
யாராவது அருகில் சென்றால் பாய்ந்து கடித்துக் கூட விடுவர்.
அன்றைய பொழுது முழுதும் மனைவி மக்களிடம் கூட தேவையில்லாமல் எரிந்து எரிந்து விழுந்து தீராத மன உளைச்சலோடு இருப்பர் !
சரி... எல்லாவற்றையும் கணித்து மிகச் சரியான விலையில் ஒரு பங்கையோ அல்லது பொருளையோ நாம் வாங்கி விட்டால் அது இறங்கும் பட்சத்தில் என்ன செய்வது..?
எது வரை பயப்படாமல் தைரியமாக இருப்பது..?
இம்மாதிரி வர்த்தகத்தை அல்லது FALSE BREAK OUTஐ அடையாளம் கண்டு அதைத் தவிர்ப்பது எப்படி..?
எப்படி ஒரு பொருளை சரியான நேரத்தில், சரியான விலையில் வாங்குவது..?
எது வரை காத்திருப்பது..?
வர்த்தகம் மேற்கொண்ட பிறகு நொடியும் அங்குமிங்கும் நகராமல் அப்படியே அமர்ந்து இடைவிடாமல் டிரேடிங் டெர்மினலையே பார்த்துக் கொண்டிராமல் EASY'யாக மனதை வைத்துக் கொண்டு குறைந்த நேரத்தில் வர்த்தகத்தை முடித்துக் கொள்வது எப்படி..?
என்பது பற்றியெல்லாம் தான் எமது வகுப்புகளில் கற்றுத் தரப்படும்!
அப்படித் தான் மற்ற வகுப்புகளில் இருந்து நாம் மாறுபடுகிறோம்!
எமது வகுப்புகளுக்குப் பின் எல்லா உணர்ச்சிகளையும் துச்சமெனக் கருதி அமைதியாக வர்த்தகம் புரிய ஆரம்பித்து வெல்லத் தொடங்கி விடுவீர்கள் - அதற்கு எமது வகுப்புகளே உத்தரவாதம்!
கடலூரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும் எங்கள் கட்டணப்
பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள எமது வலைப்பூவிலேயே வலது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெட்டியில் பெயர் பதிவு செய்து கொண்டோ அல்லது 9788563656 என்ற எண்ணை அழைத்தோ உங்கள் வருகையை உறுதி செய்த
பின் கலந்து கொண்டு சந்தையில் நீடித்த பயனடையுங்கள்!
வருக! இணைக! வெல்க!
No comments:
Post a Comment