நிஃப்டியின் நகர்வு உச்சம் உச்சம் உச்சம் ..... என்று தினம் தினம் ஒரு வரலாற்று உச்சத்தை தொடர்ந்து கொண்டே இருப்பது சந்தையில் வர்த்தகர்கள் மற்றும் புது முதலீட்டாளர்களைச் சற்றே கவலையில் ஆழ்த்தியுள்ளது!
தகுந்த கரெக்ஷன் இல்லாமல் இப்படி தாறுமாறாக ஏறும் சந்தை, திடீரென ஒரு நாள் மிக ஷார்ப்பாக கீழே விழும் அபாயத்தை தன்னுள் வைத்தபடியே தான் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதால் வர்த்தகர்கள், சிறு முதலீட்டாளர்கள் இந்நாட்களில் மிகவும் கவனத்துடன் செயல்படுவது அவசியமாகிறது!
குறிப்பாக முதலீட்டாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு பாய்ந்து சென்று ஒரேடியாக முதலீடு செய்யாமல் பரவலாக துறை தோறும் சிறிது சிறிதாக முதலீடுகளை மேற்கொள்வதே சாலச் சிறந்தது!
மீண்டும் எச்சரிக்கிறோம்...!
AUG 28ற்கும் SEP 01ற்கும் இடையே உள்ள
இடைவெளி (GAP) - (7977 ------------8018 ) இன்னும் நிரப்பப்படாமலேயே NIFTY FUTURES தன் உயர்வைத் தொடர்வது மிகவும் அபாயகரமானது!
இதோடு இப்போது நேற்றைய GAP உம் சேர்ந்து கொண்டுள்ளது!
இனி இன்றைய NIFTY FUTURES ன் நிலைப்பாடு....
நேற்று ஒரு GAP UP திறப்பு நடத்திய நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் 8197.55 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு 8192 என்று அதனருகிலேயே நிறைவடைந்தது!
இன்று நார்மல் ஓப்பனிங் ஆகும் பட்சத்தில் 8203 என்பது
நல்ல தடுப்பாக அமையும்.
அதற்கு மேல் 20 நிமிடங்கள் நின்று வர்த்தகமாகும் எனில்
8215-25 சாத்தியப்படும்!
அல்லாது இன்று 8200 கடக்காமல் 8180 என்ற நிலை உடைபட்டு கீழே 15 நிமிடங்கள் வர்த்தகமானால் 8155-45 போன்ற அளவுகளை அடைய வழி வகுக்கும்!
INTRADAY RESISTANCES @ 8205- 25
INTRADAY SUPPORTS @ 8180-54-43
NB: இப்பதிவிடும் நேரம் S&P CNX NIFTY FUTURES 8193 என்ற அளவில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது!
DISCLAIMER
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.
No comments:
Post a Comment