Thursday, August 21, 2014

இன்றைய சந்தை அடிப்படை (AUG 21)

அமெரிக்க வீடுகள் விற்பனைக்கு 

இந்திய நேர அளவில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு யூரோவை நேரடியாகவும் அதற்கெதிரான அமெரிக்க டாலரை மறைமுகமாகவும் பாதிக்கவல்ல செய்திகளான, ஜெர்மனி நாட்டு  உறபத்தியின் பர்ச்சேஸ் மேனேஜர்ஸ் இன்டெக்ஸ் மற்றும் அதன் சேவை பற்றின தகவல்கள் வெளியாகவுள்ளன!

அதைத் தொடர்ந்து பிற்பகல் இரண்டு மணிக்கு இங்கிலாந்தின் GBP நாணயத்தை பாதிக்கக் கூடிய (மாதாந்திர மற்றும் வருடாந்திர) சில்லறை விற்பனை தகவல்களும், அதன் core retail sales உம் இணைந்து வெளிவர இருக்கின்றன!

இயற்கை எரிவாயுக் கிடங்கு 
இவை அல்லாது இன்று மாலை ஆறு மணிக்கு அமெரிக்க டாலரை நேரடியாக பாதிக்கும்படி வெளியாகும் இனிஷியல் ஜாப்லெஸ் க்ளைம்ஸும் அதைத் தொடர்ந்து மாலை ஏழரை மணியளவில் வெளியாகும் கையிருப்பு வீட்டு விற்பனை மற்றும் அதன் மாதாந்திர அறிக்கை, ஃபிலடெல்ஃபியா FED உற்பத்தி குறியீடு போன்ற தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன!

மட்டுமல்லாமல் இன்று இரவு எட்டு மணிக்கு வெளியாகும் இயற்கை எரிவாயு கையிருப்பு தகவல் அதன் வர்த்தகத்தில் 7:55PM முதல் 8:20 PM வரை அதிவேக அலைகளை உருவாக்குமாதலால் நேச்சுரல் காஸிலும் கவனம் தேவை!

அது அல்லாது இன்று கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி, காப்பர், நிக்கல் ஆகியவற்றில் வர்த்தகர்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய நேரம்...

12:30 PM - 1:30PM
2: 00 PM - 2:30 PM
6:00 PM - 6:30 PM
7:30 PM - 8:20 PM

நேரம் அறிந்து சந்தையில் செயல்படுவோமெனில் என்றென்றும் வெற்றி நமதே!

வெல்க!





No comments: