இந்திய நேர அளவில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு வெளியாகும் இங்கிலாந்து வங்கியின் MPC கூட்ட நிமிடங்கள், மாறும் மற்றும் மாறா வாக்குகள், வாக்குயர்வுகள், குறைப்புகள் என்று GBP நாணயத்தை நேரடியாகவும், டாலர், கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தை மறைமுகமாகவும் பாதிக்கும் தகவல்கள் கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன!
முன்னதாக 11:30 AMற்கு வெளியாகும் ஜெர்மனியின் மாதாந்திர மற்றும் வருடாந்திர உற்பத்தியாளர் விலை குறியீட்டுத் தகவல் யூரோ/டாலர் மட்டுமல்லாது கச்சா எண்ணெய் மற்றும் காப்பர் அதில் உரிய பாதிப்புகளைக் கொண்டு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது!
சந்தை இறுதியில் வெளியாகும் FOMC MINUTES இரவு பதினோரு மணிக்கு மேலான இந்திய பொருட்சந்தை வர்த்தகத்தையும் நாளைய ஆரம்ப வர்த்தகத்தையும் பாதிக்கவல்லதாகப் பார்க்கப்படுகிறது!
ஆக.. கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி, காப்பர், நிக்கல் வர்த்தகத்தில் இன்று வர்த்தகர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம்
11:30 AM - 12:10 PM
2:00 PM - 2:40 PM
வெல்க!
No comments:
Post a Comment