Tuesday, August 12, 2014

இன்றைய சந்தை அடிப்படை (AUG 12)



இந்திய நேர அளவில் இன்று பிற்பகல் 2:30க்கு வெளியாகும் German Zew Economic Statement யூரோவை நேரடியாகவும் அதற்கெதிரான டாலரை மறைமுகமாகவும் பாதிக்கவல்லதாகத் தெரிகிறது!

சென்ற வெளியீட்டில் 27.1 ஆக இருந்த இது இன்று 18.2 ஆக எதிர்ப்பார்க்கப்படுகிறது!

மீறி வெளியாகும் பட்சத்தில் யூரோவிற்கு எதிரான டாலரின் விலையைக் குறைத்து கச்சா எண்ணெய் விலை சரிய வழி வகுக்கும் - அதே சமயம் தங்கம் மற்றும் வெள்ளி மேலுயரும்!

மாறாக நடந்தால் (எதிர்ப்பார்ப்பிற்குக் கீழ் தகவல் வெளியானால்) யூரோ அந்நேரத்தில் வலுவிழந்து டாலர் மற்றும் கச்சா எண்ணெய் மேலேற ஏதுவாகும்!

இன்று இதைத் தவிர்த்த முக்கியச் செய்திகள் சந்தையை அசைக்கவிருப்பதாகத் தெரியவில்லை!

எனவே 2:30 முதல் 3:00PM வரையிலான கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி வர்த்தகம் புரியவும்!

வெல்க!




No comments: