இந்திய நேரப்படி இன்று நண்பகல் 12:00 மணிக்கு ஜப்பானிய யென்னை நேரடியாக பாதிக்கவல்ல BoJ Press conference நடைபெறுவது டாலருக்கெதிரான அதன் நகர்வில் முக்கிய பாதிப்புகளை நிகழ்த்தக்கூடுமென்பதாய்ப் பார்க்கப்படுகிறது!
இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாகும் இந்திய வங்கிக் கடன் வளர்ச்சி மற்றும் அந்நியச் செலாவணிக் கையிருப்பு தகவல்கள் (சென்ற முறை இது 320.56B ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது) தினவர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மிதமான மாறுதல்களைக் கொண்டு வரலாம்!
அதைத் தொடர்ந்து மாலை ஆறு மணிக்கு வெளியாகும் கனடா நாட்டின் வேலைவாய்ப்பு மாற்றம் பற்றின தகவல் கனடிய டாலரையும் அதற்கெதிரான அமெரிக்க டாலரையும் மட்டுமல்லாது குறிப்பிட்ட நேரத்தில் கச்சா எண்ணையின் விலை நகர்வையும் சேர்த்தே பாதிக்கும்!
-9.4K ஆக இருந்த எண்ணிக்கை இம்முறை 25.4K ஆக வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது!
அதே நேரத்தில் அமெரிக்க டாலரின் முகப்பை நேரடியாக பாதிக்கும் விவசாயம் சாரா உற்பத்தியின் காலாண்டு அறிக்கையும் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது!
இதற்கு மேல் வெளியாகும் பட்சத்தில் கனடிய டாலர் பலம் பெற்று அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணெய் தினவர்த்தகத்தில் அந்நேரம் வலுவிழக்கும்!
வர்த்தகர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டிய நேரம்..
12:00 - 12:30 PM
5:00 - 6:30 PM
வெல்க!
No comments:
Post a Comment