4:30 PM - GBP நாணயத்தை நேரடியாகவும் அதற்கெதிரான அமெரிக்க டாலரை மறைமுகமாகவும் பாதிக்கவல்ல செய்திகளான இங்கிலாந்து வங்கியின் வட்டி விகித அறிக்கை மற்றும் அதன் மொத்தக் காலாண்டு அறிக்கை வெளியீடு.
வட்டி விகித விவரம்:-
சென்ற வெளியீடு : ௦.50%
சந்தை எதிர்ப்பார்ப்பு : 0.50%
எதிர்ப்பார்ப்பிற்கும் கீழ் வெளியாகும் பட்சத்தில் கச்சா எண்ணெய் மற்றும் அமெரிக்கை டாலரை இச்செய்தி உயர்த்திப் பிடித்து தங்கம் மற்றும் வெள்ளியை 4:30 - 5:00PM வரையிலான வர்த்தகத்தில் கீழிறக்கிப் பார்க்கும்..
மாறாக நடந்தால் கச்சா எண்ணெய் சரிந்து தங்கம் உயரும்!
அதைத் தொடர்ந்து யூரோவை நேரடியாக பாதிக்கவல்ல வட்டி விகித முடிவுகள் மற்றும் ECB Press Conference முறையே மாலை 5:15 க்கும் 6:00 மணிக்கும் வெளிவர இருப்பதும் இன்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளாகக் கருதப்படுகிறது!
மாலை 7:30க்கு வெளியாகும் Ivey PMI கனடிய டாலரை நேரடியாகவும் அமெரிக்க டாலரை மறைமுகமாகவும் பாதிக்கவல்லதாகத் தெரிகிறது!
தொடர்ந்து 8:00 PM ற்கு வெளியாகும் இயற்கை எரிவாயு கையிருப்பு தகவல்
88Bயிலிருந்து 84B ஆக குறைத்து எதிர்ப்பார்க்கப்படுவதும் அந்நேர NG வர்த்தகத்தில் அதன் விலையில் அதிவேக மாறுதலைக் கொண்டு வரும்!
ஆக இன்று மாலை தொடர்ச்சியாக செய்திகள் வரும் வண்ணம் இருப்பதாலும், முக்கிய கமாடிட்டிகளில் மேலும் கீழுமான அதிவேக அலைகள் உருவாக வாய்ப்புகள் தெரிவதாலும் வர்த்தகர்கள் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, தங்கம், வெள்ளி மற்றும் காப்பரில் மாலை 4:40 தொடங்கி மாலை முழுதும் (8:30 PM வரை) கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்!
குறைந்த அனுபவம் உள்ள வர்த்தகர்கள் யாரும் இன்று மாலை புதிதான பொசிஷனுக்குள் நுழைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்!
வெல்க!
No comments:
Post a Comment