Tuesday, August 26, 2014

இன்றைய சந்தை அடிப்படை (AUG 26)



இந்திய நேரப்படி இன்று மாலை அமெரிக்க டாலரை
நேரடியாக பாதிக்கவல்ல இரு முக்கியச் செய்திகள் பின்வருமாறு..

1) ஆறு மணியளவில் வெளியாகும் core durable goods orders மற்றும் durable goods orders சென்ற மாதம் 1.9% ஆக இருந்த இது இன்று ௦.5% ஆக சந்தையால் எதிர்ப்பார்க்கப்படுகிறது!

எதிர்ப்பார்ப்பிற்கு மேல் வெளியாகும் பட்சத்தில் டாலர் குறியீட்டை இது மேலேற்றிப் போகும் வாய்ப்புகள் உண்டு!
அல்லாத பட்சத்தில் தலை கீழாக நடக்கும்!

2) அதைத் தொடர்ந்து மாலை 7:30 க்கு அமெரிக்க conference board இன் நுகர்வோர் நம்பிக்கை புள்ளி விவரமும் வெளியாக உள்ளது!

சென்ற வெளியீட்டில் 90.9% ஆக இருந்த இதுவும் இம்முறை சந்தையால் குறைத்து 89% ஆக எதிர்ப்பார்க்கப்படுகிறது!

எதிர்ப்பார்ப்பிற்கு கீழ் தகவல் வெளியாகுமெனில் டாலர் குறியீட்டைச் சரித்து தங்கத்தைச் சற்றே மேலேறிச் செல்ல வைக்கும் என்று நம்பப்படுகிறது!
அல்லாத பட்சத்தில் தலைகீழாக நகர்வுகள் அமையும்!

இன்று தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர் மற்றும் நிக்கல் கமாடிட்டிகளில் கவனமாக வர்த்தகம் புரிய வேண்டிய நேரம்
5:55 - 6:30 PM & 7:25 - 7:55 PM

ஒவ்வொரு நாளும் வெளியாகும் புள்ளி விவரங்கள் மற்றும் செய்திகள் யாவும் நொடியும் தாமதமில்லாமல் நமது வலைப்பூவின் SIGNIFICANT DATA TODAY என்ற TABஇன் கீழ் உடனுக்குடன் கிடைக்கப்பெறலாம்!

பயன்படுத்தி வெல்க வர்த்தக நட்புகளே!



No comments: