இன்று வெளியாகும் செய்திகளில் அதிக முக்கியத்துவம் பெறுவதாக இரு வேறு நாணயங்களை பாதிக்கவல்ல இரண்டு செய்திகள்
வரவிருக்கின்றன!
முதலாவதாக பிற்பகல் 1:30 க்கு வெளியாகும்
ஜெர்மனியின் தற்போதைய வர்த்தக மதிப்பீடும், அதன் எதிர்ப்பார்ப்பும்..
இது யூரோவை நேரடியாகவும் அதற்கெதிரான டாலரை மறைமுகமாகவும் பாதிக்கவல்லது!
IFO பொருளாதார ஆய்வு நிறுவன வெளியீட்டின்படி ஜெர்மனியின் முந்தைய வர்த்தக எதிர்ப்பார்ப்பு அளவானது 103.4 புள்ளியிலிருந்து இம்முறை
102.5 புள்ளியாக குறைத்தே எதிர்ப்பார்க்கப்படுகிறது!
இவ் எதிர்ப்பார்ப்பு உயரும் பட்சத்தில் அந்நேரத்தில் யூரோ வலுப்பெற்று
அதற்கெதிரான டாலரை சரியச் செய்யும்.
குறைந்தால் யூரோவின் மதிப்பு குறைந்து டாலர் மற்றும் கச்சா எண்ணெய் வலுப்பெற வழி வகுக்கும்!
இரண்டாவதாக, மாலை 7:30 மணிக்கு வெளியாகும் அமெரிக்காவின் புதிய வீட்டு விற்பனை
மற்றும் அதன் மாதாந்திர அறிக்கை.
இது அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணையை நேரடியாகவும் வலுவாகவும்
பாதிக்கவல்ல செய்தியாகும்!
மக்கட்தொகை கணக்கெடுப்பு பணியகத்தின் (Census Bureau)வெளியீட்டின்படி சென்றமுறை 4,06,000
ஆக இருந்த எண்ணிக்கை இம்முறை சந்தையால் சற்றே அதிகரித்து 4,25,000
ஆக அனுமானிக்கப்படுகிறது!
அனுமானத்திற்கு மேல் வெளியாகும் அசல்
தகவல் டாலர் மற்றும் கச்சா எண்ணெய் வலுப்பெற வழிவகுத்து தங்கம், வெள்ளி கீழிறங்கப்
பண்ணும்!
அல்லாத பட்சத்தில் டாலர் மற்றும்
கச்சா எண்ணெய் சரிந்து தங்கம் மற்றும் வெள்ளி மேலேற வழிவகுக்கும்!
ஆக இன்று தங்கம், வெள்ளி, நிக்கல்,
காப்பர் மற்றும் கச்சா எண்ணையில்
வர்த்தகர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம்
1:25 – 2:00 PM & 7:25 – 8:00 PM
வெல்க!
No comments:
Post a Comment