Wednesday, December 17, 2014

M I D TECHNIQUES SUCCESS RATE

எமது  M I D தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை

மூன்று மாதங்களுக்கு முன் பாண்டிச்சேரியில் (சரியாக அக்டோபர் மாதம் 11ஆம் தேதி) ஒரு (நண்பர்களுடனான) GET TOGETHER இன் போது நெருங்கிய நண்பர் ஒருவருக்கும் எனக்கும் நடந்த சந்தை சார்ந்த உரையாடல் அப்படியே கீழே தரப்பட்டுள்ளது!

நண்பர்: சதீஷ்.. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க...மார்க்கெட்ல நானும் எவ்வளவோ பேர பார்த்துட்டேன்.. இவ்வளவு சம்பாதிக்க முடியும்..அவ்வளவு சம்பாதிக்க முடியும்..இந்த டெக்னிக் இருக்கு அந்த டெக்னிக் இருக்குன்னு பெருசா சொல்றாங்களே ஒழிய ஒருத்தரும் இதுவரைக்கும் எனக்கு லாபம் பண்ணி தரல..!
நம்ம கிட்ட இன்வெஸ்ட் பண்ண சொல்லிட்டு அதுக்கப்புறம் எதையும் காது கொடுத்து கேட்கறது கூட இல்ல..?
இது ஏமாத்து வேலை தானே!
நானும் எவ்வளவோ பார்த்துட்டேங்க..இந்த பிஸ்னஸ்ல சம்பாதிக்கவே முடியாது..அதான் உண்மை..
வேணா ப்ரோக்கர்களும் உங்களை மாதிரி வகுப்பு எடுக்கறவங்களும் இதுல நல்லா சம்பாதிக்கலாம்!
டிரேடர்ஸ் இதுல பணம் பண்ணவே முடியாதுங்க!

நான்: ஹாஹா நானும் பேசிக்கா ஒரு டிரேடர் தாங்க! சரி போகட்டும்... நீங்க எத்தனை வருஷமா டிரேடிங் பண்றீங்க ?

நண்பர்: அது இருக்குங்க ஒரு அஞ்சாறு வருஷம்!

நான்: எட்டு வருஷத்துக்கு முன்னே உங்களை மாதிரி ஆரம்பத்துல மத்தவங்க சொல்ற ஸ்டாக்கையோ கமாடிட்டியையோ வாங்கிட்டு ஏமாற்றமடைஞ்சு நானும் இப்படி அவநம்பிக்கையா பேசிக்கிட்டு திரிஞ்சவன் தான்! ஆனா ஒரு மூணு வருஷத்துக்கு அப்புறம் ஒரு கட்டத்துல முழிச்சிக்கிட்டு இதுல ஒரு தொழில்நுட்பம் வகுத்து அதுபடி கரெக்டா போயிட்டு இருக்கேன்!
இன்னைக்கு வரைக்கும் மார்க்கெட் ஒரு அமுதசுரபியா தான் இருக்கு! என் கிட்ட ரெக்கார்ட்ஸ் கூட இருக்கு!

நண்பர்: ரெக்கார்ட்ஸ விடுங்க ஸார்.. எல்லாரும் அது மாதிரி தான் சொல்றாங்க! காட்டறாங்க.. CURRENT STATUSக்கு வாங்க!

நான்: சரி... நீங்க இந்த பிஸ்னஸ்ல எப்படி கன்வின்ஸ் ஆவீங்கன்னு சொல்லுங்க!

நண்பர்: ஒண்ணுமில்ல ஸார்.. இப்போ நீங்க ஒரு டெக்னிக் சொல்லி தர்றீங்க இல்லையா..? அதை வெச்சு ஒரு 50% ரிட்டர்ன்ஸ் எடுக்க முடியுமா..? ஆறு மாசம் கூட டைம் எடுத்துக்கோங்க.. ஆனா தொடர்ச்சியா TRADE நடந்திருக்கணும்..
சும்மா ஒரு TRADE ரெண்டு TRADE போட்டு அதுல 50% எடுத்துட்டு அப்புறம் சும்மா இருந்துட்டு கணக்கு காமிக்க கூடாது!
ஏன்னா ஃப்ளூக்கா கூட அப்படி நடக்கலாம்!

உங்களோட MONEY MANAGEMENT படியோ அல்லது எப்படியோ அதை செஞ்சு எனக்கு எடுத்துத் தர முடியுமா.. சொல்லுங்க ?

நான்: உங்களுக்கு மார்க்கெட் பத்தின அடிப்படை புரிதலும் ஒரு தொழில்நுட்பத்தை எப்படி அணுகணும்னும் நல்லா தெரிஞ்சிருக்கு ..அதுக்கு முதல்ல உங்களை பாராட்டியே ஆகணும்.. ஆனா உங்களுக்கு இந்த பிஸ்னஸ்ல யாராவது பணம் பண்ணி கொடுக்கணும்னு நினைக்கறத முதல்ல விடுங்க.. உங்களையே அப்படி TRAIN பண்ணிடறேன்... அப்புறம் நீங்களே அதை பண்ணுங்களேன்! நீங்க ஒரு பிஸ்னஸ் மேன்... தொழில்ல வர்ற லாபத்துல ONE TIME உங்களுக்கு வர்ற பங்கு முக்கியமா..இல்ல தொழில் ரகசியம் முக்கியமான்னு தெரியுமில்ல?

நண்பர்: கரெக்ட் சதீஷ்.. ஆனா யாருகிட்டேயும் நம்பகத்தன்மை இல்லையே..?! அதுதானே என் கம்ப்ளைன்டே!
எனக்கு பணம் முக்கியமில்லைங்க... நான் ஏற்கனவே சொன்னா மாதிரி ஒரு CODEல சின்ன தொகை போடறேன் - ரொம்ப சின்ன தொகை தான் போடுவேன்... ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு ஆறு மாசத்துல அம்பது பர்சன்ட் எடுத்துக் கொடுத்துடுங்க..
உங்க டெக்னிக்க அஞ்சு மடங்கு விலை கொடுத்து வாங்கிக்கிட்டு  உங்களோட ஒரு பெரிய க்ளையன்டாவே மாறிடுறேன்! முடியுமா?

நான்: ஹாஹா அஞ்சு மடங்கெல்லாம் நீங்க கொடுக்க வேண்டாங்க.. எனக்கு பணம் கொடுக்க மார்க்கெட் இருக்கு!
சரி.. இதை ஒரு ஆரோக்கியமான சவாலா எடுத்துக்கறேன்!
ஏற்கனவே என்கிட்டே இது மாதிரி ரெக்கார்ட்ஸ் இருக்கு ஆனாலும் உங்களுக்காக ஃப்ரெஷ்ஷாவே செய்யறேன்!

(இடைச்செருகல்: இது மாதிரி நிரூபிப்பதோ, சம்பாதித்துத் தருவதோ எமது பிரதான நோக்கமல்ல என்றாலும் சம்பந்தப்பட்ட நண்பருக்கு மார்க்கெட்டில் நம்பிக்கை வருவதற்காக இந்த மெனக்கெடலை மேற்கொண்டேன் கட்டாயம் இதைத் தொடரும் எண்ணம் எமக்கில்லை இது எம் வேலையுமில்லை! )

இதற்குள் மற்ற நண்பர்கள் பொறுமையிழந்து
ஏன்டா இங்க வந்தும் பிஸ்னஸ் தானா.. சின்சியர் சோம்புகளா..! என்று எங்களை கலாய்க்க ஆரம்பிக்க...
அதோடு அந்த உரையாடல் நின்று போனது!

ஆனால் அடுத்த வார இறுதியில் சொல்லிவிட்டோமே என்று அவரிடமுள்ள ஒரு codeஇல் 20,000 ரூபாய் முதலீடு செய்து விட்டு ID, PASSWORD கொடுத்து விட்டு ஃப்ரான்ஸ் பறந்து விட்டார்..
ஆறு மாதம் டைம் கொடுத்தார்.. போகும் போதும் மறக்காமல்
மார்ச் 2015 இந்தியா வருவேன்.. அப்போது பார்க்கலாம்..
இந்த முதலீடு புஸ்ஸா எஸ்ஸா என்று சிரித்து விட்டுப் போனார்!

நமக்கிருக்கும் ஆயிரத்தெட்டு வேலையில் இது வேறயா? இந்தாள் நம்பினா என்ன..நம்பாம போனா நமக்கென்ன? என்று மனதிற்குள் தோன்றியது..!
சரி நடப்பவை நன்மைக்கே.. என்று அந்த CODE’இலும்
2014 அக்டோபர் 29ஆம் தேதியிலிருந்து வர்த்தகத்தைத் தொடங்கினேன்!
2014 DECEMBER 12 தேதியன்று கிட்டத்தட்ட 50% இலக்கு எட்டியாகிவிட்டது!
அதாவது 20,000 ரூபாய், 30,000 ரூபாய்க்கு மிக அருகில் இன்று அக்கவுண்ட்டில் உள்ளது!
அவர் கொடுத்தது ஆறு மாத கால அவகாசம்.. சவால் முடிந்தது பாதி அவகாசத்தில்  
படத்தில் நீங்கள் பார்ப்பது அதற்கான LEDGER BALANCE ஐ தான்!

வாடிக்கையாளர்களின் இம்மாதிரி முதலீடுளையும் லாபங்களையும் மட்டுமே பொதுவெளியில் வெளியிட முடியும்! அனைத்தையும் அல்ல! என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்!

இது ஒரு மிகச்சிறிய உதாரணம் தான்
இதை விடவும் பல மடங்கு சந்தையில் பெரிதாக சாதிக்க முடியும் தகுந்த தொழில்நுட்பமும், பயிற்சியும், முயற்சியும், உழைப்பும், கவனமும் இருந்தால்!

நன்றி!



PROOF







No comments: