இந்திய நேரப்படி இன்று மாலை ஐந்து மணியளவில் ரூபாயை நேரடியாக
பாதிக்கவல்ல RBI வெளியீடான வங்கிக் கடன் வளர்ச்சி, வைப்பு வளர்ச்சி,
மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு தகவல்கள் வெளிவர இருக்கிறது!
நமது டாலர் கையிருப்பு தற்பொழுது 317.31 பில்லியனாக உள்ளது
குறிப்பிடத்தக்கது!
மேற்குறிப்பிட்ட வெளியீடுகள் திங்களன்று நிஃப்டி மற்றும் சென்செக்ஸிலும்,
ரூபாய் மதிப்பிலும், தங்கம், வெள்ளி விலையிலும் குறிப்பிடத்தக்க
மாற்றத்தைக் கொண்டு வருமென்று எதிர்ப்பார்க்கப்படுகிறது!
தொடர்ந்து மாலை ஆறு மணிக்கு கனடிய டாலரை நேரடி
பாதிப்புக்குள்ளாக்கும் Statistics Canadaவின் வெளியீடான Core CPI & CPI யின்
மாதாந்திர மற்றும் வருடாந்திர தகவல்கள் வெளிவர இருக்கின்றன!
இவை CAD க்கு எதிரான அமெரிக்க டாலரை வலுவாக அசைத்துப் பார்க்கும்
தன்மையுடையது!
இன்று கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, தங்கம், வெள்ளி, காப்பர், நிக்கல்
போன்ற கமாடிட்டிகளில் கவனமாக இருக்க வேண்டிய நேரம்....
5:00 – 5:40 PM; 6:00 – 6:40 PM;
நேரமறிந்து, வர்த்தகம் புரிந்து வெல்க!
No comments:
Post a Comment