Thursday, September 18, 2014

இன்றைய சந்தை அடிப்படை (செப் 18)


 இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் GBP நாணயத்தை நேரடியாகவும் 
அதற்கெதிரான அமெரிக்க டாலரை மறைமுகமாகவும் பாதிக்கவல்ல 
செய்திகளான Retail Sales (மாதாந்திரம் & வருடாந்திரம்) Core Retail Sales 
(மாதாந்திரம் & வருடாந்திரம்) தொடர்ந்து வெளிவர இருக்கிறது!

 மாலை ஆறு மணியளவில் அமெரிக்க டாலர் குறியீட்டை நேரடியாக 
பாதிக்கும் Building permits, Initial Jobless Claims, Housing Starts, Continuing Jobless Claims மற்றும் வேலை வாய்ப்புக் கோருதலின்  நான்கு வார சராசரி போன்ற பல செய்திகளோடு FED சேர்மன் எல்லன் அவர்களின் உரையும் 6:15 PM க்கு 
வெளியாகிறது!
தொடர்ந்து மாலை ஏழரை மணிக்கு மீண்டும் டாலரை பலமாக அசைத்துப் 
பார்க்கவல்ல Philadelphia Fed Manufacturing Index தகவலும் எட்டு மணிக்கு 
இயற்கை எரிவாயு கையிருப்பு தகவலும் வெளிவர உள்ளதால் இன்று கச்சா 
எண்ணெய், இயற்கை எரிவாயு, தங்கம், வெள்ளி, காப்பர், நிக்கல் போன்ற 
கமாடிட்டிகளில் கவனமாக இருக்க வேண்டிய நேரம்....


2:00 2:40 PM; 6:00 6:40 PM; 7:30 8:30 PM

நேரமுமறிந்து, வர்த்தகம் புரிந்து வெல்க!








No comments: