Tuesday, September 16, 2014

இன்றைய சந்தை அடிப்படை (செப் 16)



இந்திய நேரப்படி இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு (பிரிட்டன் பவுண்ட் நாணயத்தை 
நேரடியாகவும் அதற்கெதிரான அமெரிக்க டாலரை மறைமுகமாகவும் பாதிக்கும்படி) 
வெளியாகும் வருடாந்திர மற்றும் மாதாந்திர நுகர்வோர் விலை குறியீட்டு எண், 
மாதாந்திர வெளியீடான PPI INPUT; அதைத் தொடர்ந்து 2:30 மணிக்கு யூரோவை 
நேரடியாக பாதிக்கும் German ZEW Current Conditions, Economic sentiments செய்திகள் இன்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன!

மட்டுமல்லாமல், மாலை ஆறு மணியளவில் அமெரிக்க டாலர் குறியீட்டை 
நேரடியாக பாதிக்கும் PPI (மாதாந்திர & வருடாந்திர) தகவல்கள் குறிப்பிடத்தக்க 
மாற்றத்தை சந்தையில் கொண்டு வருமென்று தெரிகிறது!

 
தொடர்ந்து இரவு 10:15 PM க்கு வெளியாகும் கனடிய கவர்னர் போலோசின் உரையும்,
இந்திய பொருட்சந்தை முடியும் தருவாயில் டாலர் சந்தை மற்றும் கச்சா எண்ணை 
அதில்  பாதிப்புகளைக் கொண்டு வருமென்று எதிர்ப்பார்க்கப்படுகிறது!

இன்று வர்த்தகர்கள் கச்சா எண்ணை, தங்கம், வெள்ளி, காப்பர் அதில் கவனமாக 
இருக்க வேண்டிய நேரம்...

2:00 3:00 PM; 6:00 6:55 PM; 10:10 11:00 PM


நேரமறிந்து வர்த்தகம் புரிந்து வெல்க!



No comments: