ராகம்-சரஸ்வதி மனோஹரி தாளம்-திஸ்ரம் ஏகம்பிள்ளைப் பிராயத்திலே-அவள் பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேனங்கு பள்ளிப் படிப்பினிலே-மதி பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட வெள்ளை மலரணமேல்-அவள் ணையுங் கையும் விரிந்த முகமலர் விள்ளும் பொருளமுதும்-கண்டேன் வெள்ளை மனது பறிகொடுத் தேன், அம்மா! ஆடி வருகையிலே-அவள் அங்கொரு வீதி முனையில் நிற்பாள்;கையில் ஏடு தரித்திருப்பாள்-அதில் இங்கித மாகப் பதம் படிப்பாள், அதை நாடி யருகணைந்தால்-பல ஞானங்கள் சொல்லி இனிமைசெய்வாள்:”இன்று கூடி மகிழ்வ” மென்றால்-விழிக் கோணத்தி லேநகை காட்டிச் செல்வாள்,அம்மா! ஆற்றங் கரைதனிலே-தனி யானதோர் மண்டப மீதினிலே,தென்றற் காற்றை நுகர்ந்திருந்தேன்-அங்கு கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்;அதை ஏற்று மனமகிழ்ந்தே-’ அடி என்னோ டிணங்கி மணம்புரி வாய்” என்று போற்றிய போதினிலே-இளம் புன்னகை பூத்து மறைந்துவிட்டாள்,அம்மா! சித்தந் தளர்ந்ததுண்டோ?-கலைத் தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு பித்துப் பிடித்ததுபோல-பகற் பேச்சும் இரவிற் கனவும் அவளிடை வைத்த நினைவை யல்லால்-பிற வாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிரு பத்திரண் டாமளவும்-வெள்ளைப் பண்மகள் காதலைப் பற்றிநின் றேன்,அம்மா! |
JUST FINISH YOUR SUCCESS TRADE WITHIN 15 MINUTES EVERYDAY BY LEARNING OUR POWERFUL P I M T TECHNIQUE - THE HIGHEST SUCCESS RATE YOU HAVE EVER MET
Thursday, July 24, 2014
பாரதியுடன் விடியும் பொழுது...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment