Thursday, February 18, 2010

A GENIUS CALLED GANN (A TAMIL INTRO TO GANN)


GANN எனும் சகாப்தம்
அத்தியாயம் - 2

பெருவாரியான ஆய்வாளர்களுக்கும் , சந்தை வர்த்தக வணிகருக்கும் நன்கு பரிச்சியமான நபராக திகழ்ந்தார் ‘William Delbert Gann’ என்ற அறிஞர் .
20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த வணிகருள் தலை சிறந்து விளங்கிய இவர் ,நுணுக்கமான ஆய்வுகள் மேற்கொண்டதோடு அவற்றில் சிலவற்றை மிக மிக ரகசியமாகவே பேணி பாதுகாத்தார் .

1878 ஆம் வருடம் JUNE மாதம் 6 ஆம் தேதி அமெரிக்காவின் TEXAS மாகாணத்தில் LUFKIN என்ற ஊரில் ஆச்சாரமான ,கண்டிப்பான கிறுஸ்துவ குடும்பத்தின் ஐரிஷ் தம்பதிக்கு அந்த குழந்தை பிறந்த போது யாரும் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை அது பங்கு சந்தை உலகில் பிரபஞ்ச நியதியை புகுத்தி புதுமைகள் பல படைக்கும் அறிஞனாக வளரும் என்று ..
ஆனால் கர்ம வினைப்படி (?!) அப்படித்தான் அது நடந்தது .

ஒரு கண்டிப்பான கிறுஸ்துவ குடும்பத்தில் பிறந்த தாக்கத்தால் William Delbert Gann அவர்களும் ஒரு தீவிர கிறிஸ்துவனாக வளர்ந்தார் . அவர்கள் இல்லத்தில் தினமும் சாப்பிடுவது தவறினாலும் ,பைபிள் வாசிப்பது தவறாது.
பங்கு சந்தை சுழற்சி முறையையே அவர் பைபிளில்
இருந்து அறிந்து கொண்டதாக கூறுகிறார்
.
(இடைச்செருகல் : அடியேனும் கிறுஸ்துவனே .. விழுந்து விழுந்து பைபிள் படித்தாலும் நமக்கு ஒன்றும் உறைப்பதில்லை )

Gann-இன் தாயகம் பருத்தி கொழிக்கும் மண்ணாகும் . எனவே சிறந்த வர்த்தகனாக வேண்டும் என்ற அந்த சிறு வயது வியாபாரத் தாக்கம் அனைவரும் புரிந்து கொள்ள கூடியது.
அவரது 45 வருட வர்த்தக வாழ்க்கையில் சுமார் 50 மில்லியன் U.S. டாலர்கள் பொருள் ஈட்டியதாக கணக்கு சொல்கிறார்கள் . (பருத்தி வீரன்... ???)
*(இன்றைய மதிப்பை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள் )
1906 –இல் ஓஹாகமாவிற்கு குடிபெயர்ந்த அவர் தன் வாழ்க்கையை
ஒரு இடைத்தரகராகவும் ,வர்த்தகராகவும் , தொடங்க ஆசைப்பட்டார் .
அவர் வாழ்க்கையும் ,வர்த்தகமும் ,எண்ணற்ற மேடு பள்ளங்கள் நிரம்பியதாக அமைந்தது .
10 ஆண்டு வர்த்தக அனுபவத்தின் சாராம்சமாக அவர் எழுதியது ,
“வர்த்தகரோ ,முதலீட்டாளரோ ,சந்தையில் எந்த படிப்பறிவுமில்லாமல் இறங்கினால் 90% தோல்விக்குத்தான்
அது வழி வகுக்கும் .
அவர்களின் தோல்விக்கு
பின்னால் நிச்சயம்
பயம் ,பேராசை ,குருட்டு நம்பிக்கை
போன்ற வெற்றிக்கு
எதிரான சாத்தான்கள்
மலிந்து கிடக்கும் ” என்றார்


மட்டுமல்லாமல் ,மனித இயல்புகளும் ,இயற்கையின் மாற்றங்களும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதை அடிப்படையாக வைத்து புது விதமான ஆய்வை பங்கு சந்தையில் மேற்கொண்ட திரு . W.D. Gann, அம்முயற்சியின் பலனாக WALL STREET-இன் வெற்றி வீரராக 15 வருடங்களுக்கு மேல் கோலோச்சினார்
அவர் ஆராய்ச்சியின் சாராம்சம்,
‘முன்பு நடந்தது மீண்டும் நடக்கும் ’என்ற தத்துவமாக மலர்ந்து வர்த்தக தளமெங்கும் மணம் வீசியது .














இயற்கையின் நியதி :
ஆரம்பம் தொட்டு Gann ஒரு சிறந்த ஆக்கபூர்வான படைப்பாளியாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் ,
தன்னுடைய சிந்தனைகளை வகுப்புகள் மற்றும் புத்தகங்கள் மூலமாகவும் வெளிப்படுத்த தொடங்கினார் ..
ஆனால் அவை மிக விலை
உயர்ந்த ஒன்றாகவும் ,அனைவராலும் எளிதில் அடைந்து விட
முடியாத உயரத்திலும் இருந்தன ..

பங்கு சந்தை வர்த்தகத்தில் அவரது வழிமுறைகளை சிலர் இலவசமாக அறிவிக்க கேட்டதற்கு
‘மக்களுக்கு அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்னும் வரவில்லை ’ என்று முடித்துக்கொண்டார் .
Eliot என்ற அறிஞருக்கும் இவருக்கும் உள்ள வேறுபாடாக கூறும் போது
Eliot தன் கண்டுபிடிப்பை மக்களுக்கு இலவசமாக வழங்கியவர் ;
Gann எல்லாவற்றிற்கும் மிக உயர்ந்த
கட்டணம் நிர்ணயித்திருப்பவர் ’ என்று பேசினர் .
அதை சற்றும் பொருட்படுத்தாத Gann தன்
வகுப்புகளுக்கும் ,புத்தகங்களுக்கும்
5000$ முதல் 10,000 $ வரை (இன்றைய மதிப்பில் சுமார் 50,000$)
விலையை உயர்த்திக்கொண்டே போனார் .
சில விமர்சகர்கள் ‘இவரது புத்தகத்தை வாங்குவதும்
வகுப்பை அணுகுவதும் ,
பெருமிதத்திற்குரிய கார்கள்
வாங்குவதும் ஒன்று ’ என்று
கிண்டலாக விமர்சனம் செய்தனர் .
ஆனால் தனது பார்வை பங்கு சந்தைக்கு
மட்டுமாலாமல் இயற்கையின் சுழற்சிக்கும் , பிரபஞ்ச மாற்றங்களுக்கும் கனக்கச்சிதமாக பொருந்தியதை
ஆதாரப்பூர்வமாக கண்ணெதிரே
அவர் நிரூபித்த போது
அப்படி விமரிசனம் செய்தோரெல்லாம் வாயடைத்து போயினர் .

விலையும் , கால அளவுகளும் :
Gann-இன் முதலீட்டு முறையாகட்டும் , வர்த்தகமாகட்டும் ,அவை முக்கியமாக விலையையும் ,நேரத்தையும் ,அவைகளுக்குள் எப்போதும் இருக்கும் ஒரு தொடர்பையும் பொறுத்து இருந்தது .

அதாவது , ஒரு நிறுவனத்தின் அல்லது வணிகப் பொருளின் மிக முக்கியமான விலை மாற்றம் என்பது , அதன் விலையும் ,காலமும் (அல்லது நேரம் ) சந்தித்து கொள்ளும் போது நிகழ்கிறது .இந்த மாற்றம் என்பது நிலையான ஒன்றாக எப்போதும் திகழ்கிறது என்பதை அவர் ஆய்வின் முடிவில் கண்டறிந்தார் .


GANN சிந்தனை -- பட விளக்கம்



















+




=












அப்படி நிகழப்போகும் மாற்றத்தை ,
அதாவது விலையும் ,நேரமும் சந்திக்கும்
அந்த தருணத்தை முன்னமே கணிக்கும் போது ,
சந்தையில் அது வர்த்தகர்களுக்கு அளவில்லாத
இலாபத்தை ஈட்டித்தரும் என்று நம்பினார் .

இங்கே ஒன்றை நன்கு நினைவில் நிறுத்துங்கள் - அப்படி விலையும் ,நேரமும்
ஒத்து போகாத பட்சத்தில்
நேரத்தை மட்டுமே அவர் முக்கியமாக
கருத்தில் கொண்டார் ;விலையை அல்ல .

பங்கு சந்தையில் கால அளவை குறியீடாகவும் ,
வழிகாட்டியாகவும் கொண்ட இவர்
‘இந்த வர்த்தகத்தில் மட்டும் அல்ல ..
பிரபஞ்சத்திலயே ஒவ்வொரு முக்கியமான நிகழ்வும் குறிப்பிட்ட கால, நேர அளவுடன் தொடர்பு கொண்டது தான் ;இயற்கையாகவே , இயற்கையையும் , அதன் சுழற்சியையும் காலம் ஒன்றே ஆள்கிறது ’ என்று உறுதியாக கூறினார் .
இதனால்,வாழும் காலத்தில் மட்டுமல்லாது அதற்குப் பின்னரும் சில மேதைகளால் இவர் சிறந்த ஜோதிட வல்லுனராகவும் பார்க்கப்பட்டார்
மற்றுமொரு விஷயத்தை இங்கு கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
Gann அவர்களின் கால நேர வரைபட வியூகமும்,
தகடுகளில் உரு ஏற்றி இந்தியாவில் இல்லங்களின் வாசலில் தொங்கச் செய்யும் யந்திர அமைப்பும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும் வியப்பளிக்கும் ஒற்றுமையை கவனியுங்கள்.
ஒரு வட்டத்தினுள் இருக்கும் சதுரமும்,முக்கோணமும்,அறுகோணமும் ஆயிரம் எண்ணங்களை ஒரு சேர தூண்டுகின்றன அல்லவா?

GANN EMBLEM

1)குபேர யந்திரம்






















2) கணேச யந்திரம்




3)சூரிய யந்திரம்





















GANN’ பொன்மொழிகள் :

1) .அன்று நடந்தது தான் ‘WALL STREET’-இல் மீண்டும் நடக்கும் .காளைகளின் முன்னேற்றமும் ,எதிர் காலத்தில் பதற்றமும் அன்று போலவே இருக்கும் .இது இயற்கையின் நியதிப்படி நடந்தே தீரும் .

2) “ஒரு திசையில் வினையும் ,மறு திசையில் அதன் எதிர் வினையுமாக மாறாத தாள நயத்துடன் கூடிய மாற்றங்களே சந்தையில் எதிரொலிக்கும் .இதை புரிந்து வர்த்தகர்கள் சந்தையில் எப்போதும் அலையோடு சென்று வர்த்தகம் செய்ய வேண்டும் ”

பங்கு சந்தையில் Gann-இன் இதர புதிய வர்த்தக வழிமுறைகள் :

1) GANN கோணங்கள் (GANN ANGLES)
2) ஊஞ்சல் வணிகம் (SWING TRADING)
3) Fibonacci எண் கணித வர்த்தகம் (FIBONACCI NUMBER SEQUENCE)
4) பொன் விகிதாச்சாரம் (GOLDEN RATIO)

எதுவாயினும் , Gann-இன் பார்வையும் ,ஆய்வும் எப்போதும் முதலீட்டார்களின் உளவியலையே அடிப்படையாக கொண்டிருந்தது ;வர்த்தகர்களை அல்ல .
பயம் ,பேராசை ,நம்பிக்கை போன்ற உணர்வுகளின்
உள்நோக்கிய பார்வையும் ,அவை வர்த்தகர்களின் முதலீட்டில் ஏற்படுத்தும் மோசமான
பாதிப்பையும் ,Gann அவர்களுக்கு பல சங்கதிகளை உணர்த்தியது .
அவற்றை அடிப்படையாக கொண்டு அவர் எழுதிய புத்தகங்கள் பல இன்றளவும் வர்த்தகம் புரிவோருக்கு ஒரு
பைபிளாக ,பகவத் கீதையாக,குரானாக இருந்து வருகிறது என்றால் மிகையல்ல .
அவருடைய பல தத்துவங்கள் காலத்தால் அழிக்க இயலாதவை ..
“உணர்வுகளின் தாக்கத்திலிருந்து நீங்கள் மீள்வது கடினம் .வர்த்தகரோ ,முதலீட்டாளரோ ,யாராகினும் எதிர்காலத்தில் பயத்தின் காரணமாகவே ஒரு பங்கை விற்பீர்கள் .அப்படி விற்கும் போது ,ஒன்று அது மிதமிஞ்சி விற்கப்பட்டிருக்கும் அல்லது அது 'கரடி'களின் ஆதிக்கம் ஆரம்பித்து விட்டிருக்கும் தருணமாயிருக்கும்
என்பது என் வரையில் எப்போதும் என்னை
வர்த்தக நேரங்களில் நிதானமாக நடக்க வைத்து
காப்பாற்றும் ஒரு பொன் மொழியாகும் .
இது அவருடைய படைப்புகளின் (ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட புத்தகமும் அடக்கம் )ஒரு துளி சாராம்சமே ..
‘இன்றும் கூட அறிந்தோ ,அறியாமலோ ,
வெற்றியை மட்டுமே பெரும்பாலும் ருசித்துக்கொண்டிருக்கும் வர்த்தகர்கள் இவர் முறையைத்தான் கையாள்கின்றனர்’
(அடியேனும் இதில் அடக்கம் )
என்றால் அதுவே W.D.Gann என்ற மனிதன் பங்கு சந்தையில் வாழ்வாங்கு வாழ்ந்து விட்டு போனதற்கான அழுத்தமான பதிவு , சான்று .
(GANN உலா தொடரும் ...)













No comments: