Hi Guys,
TRADING PLAN FOR DEC 31st
Today If NF trades below 5165
and breaks 5150,
then slide up to
5125-----5115, 5096, 5081
is possible
Support @ 5125
On the other side maximum run only up to 5225 possible TODAY ,
If trades abv. 5180 without breaking
5160 and cuts 5195 with volumes…
then expect 5209, 5222
ANYHOW ME,SUBSCRIBERS GOING TO RELAX..RELAX..RELAX..
TO RELISH NEW YEAR FROM NOW ON...
NO PERSONAL TRADING TILL JAN 6th
MY ADVANCE NEW YEAR WISHES
RELAAAAAAAAX CORNER
மஹிந்தீஷ் கவிதைகள்
சில பாவ மன்னிப்புகள்
*பண்டிகை விருந்து
முடித்து
பல் குத்திக்
கொண்டிருந்த போது
பாதிரியாரிடம் கோரிய
பாவ மன்னிப்பை
அர்த்தமற்றதாக்கியது
பக்கத்தில் ஒலித்த
பசித்த கிழவியின்
பலஹீனக் குரல்....
*கூடை நிறைய
காய்கறி-
விற்றுச் சென்றவள்
வீட்டில் வெறும் சோறு...
காரணம்--
நாங்கள் பேசிய பேரம்!
* இன்னும் கூட என்னை
நையப்புடையுங்கள்..
தோட்டத்தில்
நுழைந்து விடக் கூடிய
பாம்பிற்கு பயந்து
குஞ்சோடு
ஒரு அணில் கூட்டை
பிரித்து எறிந்த கோரச்
செயலுக்காய்....
இது எப்படி இருக்கு?
காட்சி 1:
வாக்காளன் விற்றது ஒரு
ஓட்டை....
வாயிற்கதவு விற்கப்பட்டு
அடைப்பட்டது கூரையின்
ஓட்டை...
காட்சி 2:
ஞானத்தங்கமே அடி ஞானத்தங்கமே,
கொக்கு வறுவலோடு
கொடுத்த பணம்
கரைஞ்சு போச்சுது .....
கொடுக்கல் வாங்கல் புரியுதாடி
ஞானத்தங்கமே--- டாஸ்மாக்கில்
புரிந்த போது
காணலியே உன்
தாலித்தங்கமே...!
உரக்கச் சொல்லடி ஞானத்தங்கமே
ஓட்டு பேரத்தில் ஓட்டையானது
யாரு தங்கமே?
காட்சி 3:
ஆயிரம் ரூவா கொடுத்தாங்க...
ஆசீர்வாதம் வேணுமினாங்க...
அவுங்க
குனிஞ்சு நிமுந்தப்போ
அருணாகொடிய காணலீங்க....
வேட்டி வாங்க
கடைக்கு போனா.....
நெடுக்கு வாக்குல நோட்ட
பாத்துப்புட்டு
எங்க
நாட்டமையாட்டம்
செல்லாது...செல்லாதுங்கராங்க...
இதேனுங்க ஞாயம்?
No comments:
Post a Comment