Wednesday, August 06, 2014

இன்றைய சந்தை அடிப்படை (AUG 06)



இன்று பிற்பகல் 2:00 PM GBP நாணயத்தை நேரடியாகவும் அமெரிக்க டாலரை மறைமுகமாகவும் பாதிக்கவல்ல Manufacturing Production, Industrial Production இன் மாதாந்திர மற்றும் வருடாந்திர வெளியீடுகள் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தையும் மறைமுகமாக பாதிக்கவல்லது!

0.6% ஆக எதிர்ப்பார்க்கப்படும்  மாதாந்திர உற்பத்தித் தயாரிப்பு புள்ளிகள் இன்று அதற்கு மேல் வெளியானால் டாலருக்கு எதிரான க்ரேட் பிரிட்டன் பவுண்ட் (GBP) உயர்ந்து இரண்டு முதல் இரண்டு நாற்பது வரையிலான வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் மற்றும் டாலர் சரிந்து தங்கம், வெள்ளி உயர வழி வகுக்கும்!

இதற்கு மாறாக வெளியாகும் தகவல் சந்தை எதிர்ப்பார்ப்பான 0.6% க்கு கீழ் வெளியானால் டாலர் மற்றும் கச்சா எண்ணெய் வலுப்பெற்று அதே நேரத்தில் தங்கம், வெள்ளி சரிய காரணமாக அமையும்!

மாலை எட்டு மணிக்கு வெளியாகும் கச்சா எண்ணெய் கையிருப்புத் தகவல் சென்ற வார வெளியீடான -3.697M ஐ விட அதிகரித்து -1.711M ஆக எதிர்ப்பார்க்கப்படுகிறது!
கையிருப்பு அதிகமானால் சட்டென்று கச்சா எண்ணெய் ஒரு இறக்கத்திற்குப் பின் திடீரென்று ஏற்றமடையும்!
கவனம் தேவை!

டாலர், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் வர்த்தகத்தில் இன்று கவனமாக இருக்க வேண்டிய நேரம்

2:00 PM - 2:40 PM
7:55 PM - 8:25 PM

வெல்க! 

[இலவச கணக்கு திறப்பு, இலவச LIVE CHARTS, பரிந்துரைகள், போன்ற விபரங்களுக்கும் சனிக்கிழமை தோறும் கடலூரில் நடைபெறும் எமது கட்டணப் பயிற்சி வகுப்பு முன்பதிவிற்கும் அலைபேசவும் 9788563656 ]





No comments: