Saturday, May 02, 2015

SOMETHING FISHY IN MCX GOLD MOVEMENT




டாலரின் நகர்வை ஒட்டியே பெரும்பாலும் MCX தங்கத்தின் நகர்வு இருக்கும் என்றாலும் உள்ளூரில் ஏற்படும் (செயற்கை/இயற்கை) தேவைகள், ஏற்றப்படும் இறக்குமதிக்கான வரிகள், தங்கத்தின் போக்கை சற்றே தனித்தும் செயல்பட வைக்கும்!

ஆனால் கடந்த ஆறு ஏழு மாத கால விலை நகர்வின் வரலாற்றை ஆய்வுக்குட்படுத்தினால் டாலர் விலையில் ஓர் குறிப்பிட்ட (மிக முக்கியமான) BREAK OUT ஆனபிறகும் தங்கம் செயற்கையாக மேலேறிய விலையிலேயே MCX இல் வர்த்தகமாகிக் கொண்டிருப்பது எம்மைப் போன்ற சந்தை ஆய்வாளர் மற்றும் வர்த்தகர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது!

இது நீண்ட நாள் நீடிக்க முடியாது என்பது நன்றாகத் தெரிந்தாலும் இந்தச் செயற்கையான ஏற்றம் MCX இல் நடப்பது யாரை எந்த வலையில் வீழ்த்த என்பது அனைவருக்குமே புதிராக உள்ளது!

உதாரணமாக செப்டம்பர் 26 2014 அன்று தங்கத்தின் விலை டாலரில் 1215.40 என்று நிறைவடைந்த நேரம் MCX இல் அது 26793 ஆக நிறைவடைந்திருப்பதைப் பார்க்கிறோம்!

ஆனால் இன்று தங்கம் 1200 $ எல்லாம் எப்பொழுதோ உடைபட்டு நேற்று (MAY 01 2015) விலையானது $1174.50 என்ற நிலையில் நிறைவடைந்திருக்கும் போதும் MCX'இல் விலை 26636 என்ற நிலையிலேயே நிறைவடைந்துள்ளது..!

நியாயமாகப் பார்த்தால் இன்றைய தேதியில் தங்கத்தின் விலை மெது மெதுவாகக் குறைந்து 25,500 என்ற விலையைக் கடந்து நிறைவடைந்திருக்க வேண்டும்! 

ஆனால் இன்றளவும் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்து மேலேயே வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது!

எனக்குத் தெரிந்த சில வட நாட்டு முக்கியஸ்தர்களை தலையைத் தடவி தாஜா பண்ணி கேட்டாலும் சப்பையாக ஏதோ காரணம் சொல்கிறார்கள் ! .. ஏதும் நம்புவதற்கில்லை..!

ஆக.. இது யாரை பள்ளத்தில் தள்ள காத்திருக்கும் ஏற்பாடு..?(அல்லது) 
இதன் பின் உள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் தான் என்ன..?

நகர்வு வித்தியாசம் டாலருக்கும் MCXற்கும் முன்னே பின்னே நூறு இருநூறு புள்ளிகள் இருக்கலாம்..தப்பில்லை..ஆனால் ஒரேடியாக ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் என்றால்.......???????

கொஞ்சம் யோசிக்கத் தான் வேண்டியிருக்கிறது!

SEBI யும், RBI யும் கண்காணிப்பை மேலும் உன்னிப்பாக்கி ஆவன செய்யுமா..?

இன்னும் வாலின் நுனி கூட புலப்படவில்லை என்றாலும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் பையிலிருந்து வெளிவரும் பூனைக்குட்டியை!