Thursday, July 31, 2014

இன்றைய சந்தை அடிப்படை



2:30 PM - CPI (வருடாந்திர வெளியீடு) - சந்தை எதிப்பார்ப்பு: ௦.5% யூரோவை நேரடியாகவும், டாலர் மற்றும் கச்சா எண்ணையை மறைமுகமாகவும் பாதிக்கவல்லது!


6:00 PM - கனடிய GDP (மாதாந்திர வெளியீடு) - சந்தை எதிர்ப்பார்ப்பு: ௦.3%
கனடிய டாலரை நேரடியாகவும், டாலர் மற்றும் கச்சா எண்ணையை மறைமுகமாகவும் பாதிக்கவல்லது.
தொடர்ந்து அதே நேரத்தில் வெளியாகும் Initial Jobless Claims-ம், காலாண்டு அறிக்கையான Employment Cost Index - ம் அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணையில்  நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தவல்ல செய்திகளாகும்!



8:00 PM - இயற்கை எரிவாயு கையிருப்புத் தகவல் வெளியீடு - சந்தை எதிர்ப்பார்ப்பு: 93B

கையிருப்பு அதிகமாகும் பட்சத்தில் 8:00 முதல் 8:30 வரையிலான அதன் வர்த்தகத்தில் அதிவேக அலையின் ஆரம்பத்தில்
சட்டென்று விலை ஏறி பின் இறங்கும்! உஷார்!


பின்குறிப்பு: மேற்கூறிய தகவல்களில் சந்தை எதிர்ப்பார்ப்பைத் தாண்டி புள்ளிகள் வெளியாகுமானால் அது டாலருக்கு எதிரான குறிப்பிட்ட நாணயத்தை வலுப்பெற வைத்து கச்சா எண்ணையை டாலரின் போக்கில் பயணப்பட வைக்கும்!

இன்று கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளிய மற்றும் காப்பரில் அதிக கையிருப்போடு (பொசிஷன்) இருப்பவர்கள் கவனமாக கையிருப்பைக் குறைத்துக் கொண்டு வர்த்தகம் மேற்கொள்ள வேண்டிய நேரங்கள்...

2:30 - 3:10 PM; 5:55 - 6:40 PM; 7:55 - 8:30 PM 

வெல்க நட்புகளே!







No comments: