Monday, September 15, 2014

CRUDE OIL UPDATES (SEP 15)




கச்சா எண்ணையில் அடிப்படைச் செய்திகளின் வானிலை  (எதிர்ப்பார்ப்புகள்) 
மீண்டும் பெரும் மாற்றத்துக்குள்ளாகி இருப்பதால் இன்று அதன் விலை நூறு 
புள்ளிகள் சரிந்தே திறக்கப்படும் என்று நம்பப்படுகிறது! (i.e  NEARLY A GAP 
DOWN OF 100 POINTS OR EVEN MORE THAN THAT)

உள்நாட்டு போரையும் மீறி இங்கிலாந்து, அமெரிக்க ஆதரவால் ஐ.எஸ்.ஐ.எஸ்
அமைப்பின் அச்சுறுத்தலில் இருந்து சிறிது சிறிதாக மீண்டு வரும் சிரியா 
மற்றும் ஈராக்கின் அதிக அளவிலான எண்ணெய் வரத்தைத் தொட்டு மீண்டும் 
கச்சா எண்ணையின் தேவை சவுதி அரேபிய உற்பத்தி குறைப்பிற்கு 
சமன்செய்யப்பட்டு வர்த்தகமாகி வருவதால் இவ்விலைகுறைப்பு நடந்து 
வருவதாக நிபுணர்களால் பார்க்கப்படுகிறது!

இதைத் தொடர்ந்து வார முதல் நாளான இன்று கச்சா எண்ணையின் டாலர் 
சந்தையில் ஒரு GAP DOWN திறப்பு நடந்து,  தற்போது 90.45 $ என்ற அளவில் 
வர்த்தகம் நடந்து வருகிறது! 

டெக்னிக்கலாக இந்த இடைவெளி அடைக்கப்பட்ட பிறகே கச்சா எண்ணெய் 
தொடர்ந்து வீழுமா அல்லது மேலேறுமா என்ற அனுமானத்திற்கு வர முடியும் 
என்பதால் தற்சமயம் புதிய பொசிஷன் ஏதும் எடுக்காமல் சந்தையைக் 
கவனிப்பதே  சாலச்சிறந்தது!


PLS KEEP YOUR FINGERS CROSSED AS FOR AS CRUDE IS CONCERNED & TAKE CARE OF UR TRADE! 






No comments: