Saturday, August 30, 2014

கச்சா எண்ணெய் - ஒரு பார்வை

 5682 இல் வர்த்தகமாகிக் கொண்டிருந்த கச்சா எண்ணெய் வியாழன் அன்று 5678 என்ற குறைந்த பட்ச நிலையிலிருந்து மேலெழும்பியது!
5655 ஐ கடந்து அரை மணி நேரம் வர்த்தகமானால் SHORT போகலாம் என்று நாம் கூறியிருந்த நிலையில், அப்புள்ளிகள் எட்டும் முன்னே நேற்று ஈராக், சிரியாவில் பதற்றம் அதிகமாக கச்சா எண்ணையின் வரத்து குறைந்து அதே சமயம் மிதமான அச்சுறுத்தலில் இருந்து UK விற்கு தீவிர தீவிரவாத அச்சுறுத்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கச்சா எண்ணெய் நேற்றைய பிற்பாதி வர்த்தக நேரத்தில் சரசரவென்று எழுபது புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 5830 என்ற நிலையில் நிறைவடைந்தது!

இனி.......???

சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இங்கிலாந்துக்கு எதிரான தாக்குதலை திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக வந்த உளவுத்துறை செய்தி உறுதிப்பட்ட நிலையில் இங்கிலாந்து அமெரிக்காவுடன் இணைந்து எதிர் தாக்குதலை அறிவிக்கும் பட்சத்தில் கச்சா எண்ணையில் திடுமென்ற விலையேற்றம் வருவது உறுதி!

இந்நிலையில் தொழில்நுட்ப ஆய்வுகளோடு நமது வாடிக்கையாளர்களுக்கு செய்தி அடிப்படை கலந்தும் வர்த்தக நிலைப்பாடுகளை அறிவித்து வருவதாலும், எமது SHORT SELLING அளவான 5655 என்ற நிலை உடைபடாததாலும், இப்போது அனைவரும் பொசிஷன் ஏதும் இல்லாது பத்திரமாகவே உள்ளனர்!

இனி 5761 என்ற நிலைக்கு மேல் திங்களன்று (செப் 01) CRUDE OIL  நிறைவடைந்தால் (மட்டுமே), அதன் பின் வரும் ஒரு சிறிய/பெரிய  இறக்கத்தை பயன்படுத்தி கொஞ்சமாக (குறைவான லாட்'களில்) 5646 என்ற நிலையை நட்டத்தடுப்பாக வைத்துக் கொண்டு கச்சா எண்ணையை வாங்கலாம்!

புதனன்று தொழில்நுட்பமும் அடிப்படையும் கை கோர்க்கும் அளவுகளில் இதன் கையிருப்பைக் கூட்டிக் கொண்டே செல்லலாம் - மிகச் சரியான நேரத்தில் (எமது வலைப்பூவிலேயே) வாசக வர்த்தகர்களும், வாடிக்கையாளர்களும் கச்சா எண்ணையில் நுழைய அறிவுறுத்தப்படுவார்கள்!
அதுவரை அவசரமில்லாமல் அமைதி காக்கவும்!



No comments: