Thursday, August 28, 2014

இன்றைய சந்தை அடிப்படை (AUG 28)

இந்திய நேரப்படி இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் அமெரிக்க பணவீக்க வளர்ச்சி விகிதம், அதன் குறியீட்டு விலை மற்றும் Initial Jobless Claims ஆகிய செய்திகள் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கமாடிட்டி சந்தையில் ஏற்படுத்த வல்லது!


4% ஆக சென்ற காலாண்டில் வெளியான GDP இன்று 3.9% ஆக குறைத்தே எதிர்ப்பார்க்கப்படுகிறது!

3.9 சதவிகிதத்திற்கு மேல் வெளியாகும் புள்ளிவிவரம் இதர நாணயங்களுக்கு எதிரான டாலர் விலையையும் அதன் குறியீட்டையும் உயர்த்திச் செல்லும்
அல்லாத பட்சத்தில் டாலர் சரியும்!

இதனைத் தொடர்ந்து மாலை 7:30க்கு வெளியாகும் அமெரிக்காவின்  'மீத வீட்டு விற்பனை'  புள்ளிவிவரமும்  டாலர் நகர்வில் ஓர் மாற்றத்தைக் கொண்டு வரும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது!

சென்ற மாத வெளியீட்டில் -1.1% ஆக இருந்த விற்பனை இம்முறை 0.5% ஆக உயர்த்தி எதிர்ப்பார்க்கப்படுகிறது!

இவை அல்லாது இதற்கு முன் மாலை 5:30க்கு வெளியாகும் ஜெர்மனியின் Federal Statistical அலுவலக வெளியீடான மாதாந்திர மற்றும் வருடாந்திற CPI
தகவல்கள் காப்பர் மற்றும் நிக்கலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வருமென்று எதிர்ப்பார்க்கலாம்!

மட்டுமல்லாமல் மாலை எட்டு மணிக்கு வெளியாகும் இயற்கை எரிவாயு கையிருப்புத் தகவல் அதன் விலை நகர்வில் அதிதுரித அலையை உருவாக்க வல்லது!

ஆக இன்று பொருட்சந்தை வர்த்தகர்கள் கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி, காப்பர், நிக்கல், இயற்கை எரிவாயு ஆகிய கமாடிட்டிகளில் கவனமாக இருக்க வேண்டிய நேரம்..

5:25 - 6:30 PM & 7:25 - 8:25 PM

வெல்க!


No comments: