Friday, August 22, 2014

இன்றைய சந்தை அடிப்படை (AUG 22)


இன்று மாலை ஐந்து மணிக்கு இந்திய ரூபாயை பாதிப்புக்குள்ளாக்கும்
வங்கிக் கடன் வளர்ச்சி மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு தகவல்கள் வெளியாக உள்ளன.

அதைத்தொடர்ந்து ஆறு மணிக்கு கனடிய டாலரை நேரடியாகவும் அதற்கெதிரான அமெரிக்க டாலரை மறைமுகமாகவும் பாதிக்கவல்ல செய்திகளான (வருடாந்திர & மாதாந்திர அடிப்படையில்) CPI, Core CPI, மற்றும் அதன் சில்லறை விற்பனை வெளியாக உள்ளது.

மற்றொரு முக்கியச் செய்தியாக மாலை 7:30 மணிக்கு அமெரிக்க டாலரை நேரடியாக பாதிக்கவல்ல FED chair எல்லன் அவர்களின் உரையும் வெளிவர இருக்கிறது!


ஆக தினவர்த்தகர்கள் இன்று கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி, காப்பர் மற்றும் நிக்கல் இவற்றின் அதிதுரித அலைகளில் கவனமாக இருக்க வேண்டிய நேரம்......

5:55 6:30 PM & 7:25 8:00 PM


கவனத்துடன் வர்த்தகம் மேற்கொண்டு வெல்க!







No comments: