Tuesday, November 18, 2014

UNIQUE FEATURES OF M I D TECHNIQUES




அன்பு நெஞ்சங்களே!
இன்றளவில் சந்தையில் தொழில்நுட்ப ஆய்வு வகுப்புகள் புற்றீசல் போல் பெருகி விட்டாலும் வருடக்கணக்காக எமது தொழில்நுட்பம் வெல்லும் ரகசியம்...
M I D தொழில்நுட்பம் உள்ளடக்கிய சில பிரத்தியேக அம்சங்களால் மட்டுமே! 
அவை.....

1) தின வர்த்தகத்தில் நல்ல லாபம் பார்க்க எப்போதும் சந்தை மேலும் கீழுமான நகர்வுகளைக் கொண்டிருக்க வேண்டும்; ஆனால் தினமும் அவ்வாறு நடக்கிறதா என்றால் இல்லை; 
சில நாட்கள் சந்தை மேலும் செல்லாமல் கீழும் செல்லாமல் பக்கவாட்டிலேயே நகர்ந்து இருபுறமும் (LONG & SHORT) செல்ல விடாமல், அப்படியே சென்றாலும் வர்த்தகருக்கு இருபுறமும் நட்டத்தையே தந்து கொண்டிருக்கும்! 
இதை முன்னமே கண்டறியும் யுக்தி இருந்தால் அந்த நாளில் அந்த பொருளில் வர்த்தகம் செய்யாமல் நட்டத்தை தவிர்க்கலாம் இல்லையா..? 
M I D தொழில்நுட்பம் ஒன்றே அத்தகைய யுக்தியைத் தருகிறது!

2) அதே போல் சந்தையில் எல்லா நேரமும் வர்த்தகத்திற்கு உகந்த நேரம் அல்ல - சரியான விலையில் சரியான நேரத்தில் நுழைவதொன்றே லாபத்திற்கான வழி!
அப்படி எந்த நேரத்தில் நுழைந்தால் லாபம் சாத்தியம் என்பதும் எமது தொழில் நுட்பம் உள்ளடக்கிய இரண்டாவது சிறப்பம்சம்!

3) M I D தொழில்நுட்பத்தின் மூன்றாவது சிறப்பம்சமாக.. 
ஒரு பொருளை வாங்கி விட்டீர்கள்.. இப்போது சந்தையோ அல்லது நீங்கள் வாங்கிய பொருளின் விலையோ உங்களுக்கு எதிரான திசையில் செல்கிறது என்றால் உடனே உங்களை ஒரு பதற்றம் தொற்றிக் கொள்கிறது அல்லவா..?
'அச்சோ ஒரு ரூபா இறங்கிட்டானே..! ஐயாயிரம் போச்சே.. ரெண்டு ரூபா இறங்கிட்டானே பத்தாயிரம் போச்சே..! ' என்று ரத்த அழுத்தம் எழும்பி மன உளைச்சலையும், 'வெளியேறிவிடுவோமா..? வெளியேறிய பின் ஏறினால் என்ன செய்வது.. ஒருவேளை ஏறாமலே போய் விட்டால் அல்லது இன்னும் இறங்கி விட்டால்.. என் நிலை என்னாவது..?' என்றெல்லாம் கேள்விகளையும், குழப்பங்களையும் தருகிறது அல்லவா..? 

ஆனால் இத்தொழில்நுட்பத்தின் மூலம் அத்தகைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் வகையில், ஒரு பொருளை வாங்கிய பின், அது எதிர்த்திசையில் சென்றாலும் எத்தனை நேரம் பயமில்லாமல், குழப்பமில்லாமல் காத்திருக்கலாம் அல்லது வெளியேறும் நேரத்தை எப்படி அறியலாம் அல்லது சுத்தமாக எதிர்த்திசையில் சென்று விட்டால் எப்படி எங்கு துணிந்து REVERSE TRADE செய்து அன்றே அந்த நட்டத்தைச் சரி செய்யலாம்?' என்பதையெல்லாம் துல்லியமாகக் கண்டறியலாம்!
இம்மூன்று சிறப்பம்சங்களும் நாம் அறிந்த வரையில் இதுவரையில் வேறெந்த தொழில்நுட்பமும் கொண்டிருக்கவில்லை என்பதைத் தாழ்மையோடு தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்!
கற்க... கற்ற பின் வெல்க!
காலை வணக்கம்!

பின்குறிப்பு: 
எமது M I D TECHNIQUES அடங்கிய E-PACKAGES அதனைப் பெற்றுக் கொள்ள இன்றே அழைக்கவும் 9788563656 



No comments: